உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேராசிரியர் செய்யுற வேலையா இது ? மாணவியை மது குடிக்க அழைத்தவர் கைது; இன்னொருவர் தப்பி ஓட்டம்

பேராசிரியர் செய்யுற வேலையா இது ? மாணவியை மது குடிக்க அழைத்தவர் கைது; இன்னொருவர் தப்பி ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை கல்லூரியில் இரவில் மாணவியை தொடர்பு கொண்டு மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்; மற்றொரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் புதிய தூய சவேரியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லூரி என்பதாலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என சொல்லப்படும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முக்கிய கல்லூரி என்பதாலும் இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வந்து படிக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ebzrz4hb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்கு சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின்(வயது 40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(40) ஆகிய இருவரும் கடந்த 4-ந்தேதி இரவில் நெல்லை மாநகர பகுதியில் ஒரு விடுதியில் மது குடித்தனர். ஒரு கட்டத்தில் மது போதை அதிகமாகவே, நள்ளிரவு நேரத்தில் தனது துறையில் படிக்கும் குறிப்பிட்ட மாணவி ஒருவருக்கு போன் செய்துள்ளனர்.

மது குடிக்க வா

முதலில் பால்ராஜ் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசிக்கொண்டிருக்க, ஜெபஸ்டின் அந்த செல்போனை பிடுங்கி ஆபாசமாக பேசியதோடு நாங்கள் 2 பேரும் மது குடித்துக்கொண்டிருக்கிறோம். மது குடிக்க வா என்று கூறி அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி புகார் அளித்தனர். மறுநாள் அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்குவதற்குள், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால் எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு விடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த புகார் மனுவை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர்.அதேநேரத்தில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இந்த தகவல்களை அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்பினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரியவரவே, விசாரணை தீவிரமானது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார். அதில் பேராசிரியர்களான ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய 2 பேரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நேற்று நள்ளிரவு தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர். ஜெபஸ்டினை கைது செய்தனர்.

வழக்குப்பதிவு

இதற்கிடையில் போலீசார் வரும் தகவல் அறிந்த பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாளையங்கோட்டை போலீசார் 2 பேராசிரியர்கள் மீதும் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி இந்திய தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மாணவியிடம் நள்ளிரவில் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் மர்மம் வெளியே வருமா ?

பாளை., சேவியர் கல்லூரியில் இது போன்ற பேராசிரியர்கள் சிலர் மீது வந்த பல புகார்கள் மண்ணில் போட்டு மூடப்பட்டதாகவும், பல மாணவிகள் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இது குறித்த விசாரணை நீளுமானால் மேலும் திடுக் தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

vadivelu
அக் 12, 2024 14:05

DNA மட்டும் மாறவே மாறாது.


Ganesh Subbarao
அக் 11, 2024 13:00

இந்த விடியா திரவிடியா ஆட்சியில் பாவாடைகளின் காலை நக்குவதால் இப்படி நடப்பது சாதாரணமே


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2024 05:43

அசிங்கம் ட்ராவிடிய மாடல் அரசின் உதவியில் இந்த கல்லூரி நடப்பதால் இப்படியொரு அவளமோ ? யாரு கண்டா ஜார்ஜு பொன்னையா சொல்லும் முற்போக்குத்தனம் இப்படித்தான் இருக்கும் போல


SIVA
செப் 25, 2024 16:00

டாஸ்மாக் சேல்ஸ் அதிகரிப்பதற்காக குடிக்க அழைத்து இருக்கின்றார் , நன்றி கெட்ட திராவிட மாடல் அரசு ...


tmranganathan
செப் 21, 2024 08:45

அப்பாவு போன்றவர்கள் திமுக அரசு தங்களை காப்பாற்றும்ன்னு நினைத்து தவறு செய்து தப்பித்து விடுகின்றனர். இன்னும் கொஞ்சநாளுக்கு புழலில் அடைக்கப்படுவார்கள்.


ArGu
செப் 18, 2024 13:00

அது மது அல்லவாம் பரிசுத்த ஆவியின் பெயரால் அது பழ ரசமாக மாறிவிட்டதாம் ஆகையால் அவர்களை விடுதலை செய்யவேண்டும்


tmranganathan
செப் 17, 2024 07:23

காலம் காலமாக மாமிசம் தின்னும் கூட்டம் போதை ஏற்றிக்கொண்டு ....


Yaro Oruvan
செப் 16, 2024 18:19

ஏசப்பா ... இன்னப்பா இதெல்லாம் ... பரலோகத்துல இவனுவலுக்கு இடம் தரப்புடாதா ??? என்னமோ போ ஏசப்பா ... வர வர உங்க கும்பலோட தொல்லை ஜாஸ்தி ஆயிண்டே போவுது


U. Saravana Perumal
செப் 15, 2024 11:29

இது தமிழ்நாட்டுக்கே அவமானம்.. நமது பிள்ளைகளை யாரை நம்பி அனுப்புவது அரசு மதம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..


Mani . V
செப் 15, 2024 06:13

இதையெல்லாம் மாடல் ஆட்சியின் சாதனை என்று சொல்வதா? அவலம் என்று சொல்வதா? ஆமா, இந்த நாய்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை