உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவறான தகவல் பரப்பினால்... விஷமிகளுக்கு ஈஷா கடும் எச்சரிக்கை!

தவறான தகவல் பரப்பினால்... விஷமிகளுக்கு ஈஷா கடும் எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ' சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கில் மனுதாரரால் எழுப்பபட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை' என ஈஷா யோக மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

ஈஷா அறக்கட்டளை சத்குருவால் யோகா மற்றும் ஆன்மீகத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், ஞானத்தையும் வழங்கி உள்ளது. ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. ஏனெனில் இவை அனைத்தும் தனிமனித சுதந்திரம் மற்றும் விருப்பம், இதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என உறுதியாக நம்புகிறோம். ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்கையில் 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு பிரம்மசாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அது மட்டுமில்லாமல் மிக சமீபத்தில் காமராஜ் ஈஷா யோக மையம் சென்று தன்னுடைய மகள்களை சந்தித்த CCTV காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்கி உள்ளதால் உறுதியாக உண்மை வெல்லும் என்று நம்புகிறோம். மேலும் இதுவரை போலியாக உருவாக்கப்பட்ட அனைத்து தேவையற்ற சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் 2016ம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மா மதி மற்றும் மா மாயு ஆகிய இருவரையும் சந்தித்து நீதி விசாரணை நடத்தியது. அவர்களின் அறிக்கையின் படி தீர்ப்பு அளிக்கப்பட்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் “பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுய விருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்,' என்று கூறியுள்ளார்கள் என்பதை தற்போது நினைவுக் கூற விரும்புகிறோம். முன்னதாக, காமராஜ் ஈஷாவிற்கு எதிராக செயல்படும் பிற உதிரி அமைப்புகள் மற்றும் நபர்களுடன் சேர்ந்து, ஈஷா அறக்கட்டளையால் சுற்றுப்புற கிராம மற்றும் பழங்குடியின மக்களின் நன்மைக்காக கட்டப்பட்டு வரும் தகன மேடை குறித்து தொடர் பிரச்னைகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் அரசு அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் தான்தோன்றித் தனமாக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் குழுவாக ஈஷா வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று காவல்துறையால் தடுக்கப்பட்டனர். பின்னர் எவ்வித முகாந்திரமும் இன்றி ஈஷா தன்னார்வலர்கள் மீது கிரிமினல் புகாரும் அளித்தனர். இது தொடர்பான வழக்கில் காவல்துறையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தவிர, மனுதாரர் பொய்யாக குறிப்பிட்டதை போன்று அறக்கட்டளைக்கு எதிராக வேறு எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தமிழ்வேள்
அக் 03, 2024 19:57

இப்படி விஷமம் செய்வது பவுல் தினகரனின் காருண்யா மதமாற்ற கும்பல்... காருண்யாவின் வன ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஈஷா தடையாக உள்ளது..கோவை பகுதியில் மதமாற்றம் செய்ய கடினமாக உள்ளதால் திருட்டு திராவிடியா கும்பலின் உதவியுடன் இந்த அவதூறு நாடகங்கள்.... காருண்யாவின். வேலைகளில் திராவிட கும்பலுக்கும் பங்கு உள்ளதால் பவுல் தினகரனின் அயோக்கியத்தனங்களுக்கு துணை போகிறது அரசு எந்திரம்..


venugopal s
அக் 03, 2024 19:55

எல்லா மத சாமியார்களும் பித்தலாட்டம் செய்து அப்பாவி மக்களை ஏமாற்றுபவர்கள் தான்!


தாமரை மலர்கிறது
அக் 03, 2024 19:15

ஈஷா மையத்தை முடக்க நடக்கும் திராவிட சதி


karthik
அக் 03, 2024 16:37

இந்த நடவடிக்கையை ஆரம்பித்த இருந்தே எடுத்திருக்க வேண்டும்.. இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அந்த மீசை கோவாலு தான்.. முதலில் அவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்


SVR
அக் 03, 2024 16:12

இந்த ஈஷா மையத்தை எப்படியாவது அபகரித்து கொள்ள பட வேண்டும் என்று மெட்ராஸ் ஹை கோர்ட்டும் முண்டி பார்த்தது. அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது உச்ச நீதி மன்றத்தின் இன்றைய உத்தரவினால். அந்த இரண்டு பெண்மணிகளின் எந்த வாக்கு மூலத்தை மெட்ராஸ் உயர் நீதி மன்றம் ஏற்று கொள்ளவில்லையோ அதே வாக்கு மூலத்தை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு காவல் துறை விசாரணை நடத்த கூடாது என்று சொல்லி விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் திராவிட நீதி என்பது வேறு என்று. இதில் இந்த நீதிபதிகள் அனாவசியமாக தலையிட்டது தான். நான் சந்திரசூட் அவர்களை கேட்டுக் கொள்வது இதுதான். இந்த இரண்டு பேரையும் வேலையிலிருந்து ஓய்வு பெறுமாறு சொல்லவும். அவர்கள் அதை மறுத்தால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடவும்.இவர்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு.


Saai Sundharamurthy AVK
அக் 03, 2024 15:52

மேல்மருவத்தூர் அருகிலுள்ள அச்சரபாக்கம் மலையில் ஒரு சிவன் கோவில் ஒரு நூற்றாண்டு காலமாக உள்ளது. அந்த கோவிலுக்கு செல்லும் பாதையை மடக்கி ஆங்காங்கு சிலுவைகளை நட்டு, அந்த மலையின் மீது ஏசு வந்துவிட்டதாக ஒரு கதை கட்டி அங்கு தேவாலயம் ஒன்றை பல கோடிகள் செலவு செய்து ஆடம்பரமாக கட்டி, இரவில் அந்த மலை முழுவதும் ஒளிரும் வண்ணம் விளக்கு அலங்காரங்களை செய்து வைத்திருக்கிறார்கள். சிவன் கோவிலுக்கு வருபவர்கள் அந்த பாதை வழியாக வரக் கூடாதாம். நமக்கு தெரிந்தது, அறிந்தது ஒன்றே ஒன்று தான். சிவன் சொத்து குல நாசம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். ஏசு பிறப்பதற்கு முன்பே நமது முன்னோர்கள் சொல்லி வைத்து போய் விட்டார்கள். ஆகவே, இவர்கள் ஏசுவை கொண்டு வந்து வைத்தாலும் சரி, சிலுவையை நட்டு வைத்தாலும் சரி, அங்கு சிவனும், குமரனும் தான் அந்த ஏசு உருவத்தில் இருக்கக் கூடும். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கிறிஸ்துவர்கள் அந்த தேவாலயத்தில் சிவனையும், குமரனையும் தான் கும்பிடுகிறார்கள்.


தமிழ்வேள்
அக் 03, 2024 19:48

ஒரு நூற்றாண்டு அல்ல..பொ.யு ஆறாம் நூற்றாண்டில் இருந்தே உள்ள கோவில்... அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலின் துணைக்கோவில். நாவுக்கரசரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலம்.. வஜ்ர கிரி மலையில் சர்ச் அமைக்க பட சகல உதவிகளையும் செய்தவர் அன்றைய காஞ்சிபுரம் கலெக்டர் அல்லேலூயா சகாயம்... அங்கே சர்ச் முற்றிலும் அகற்ற படுதலே இன்றைய தேவை.


Saai Sundharamurthy AVK
அக் 03, 2024 15:00

நானும் ஈஷா மையம் போய் இருக்கிறேன். ஒரு அருமையான இடம். சிவபெருமானின் அருள் மிகுந்த இடம். யோகி ஆதி சிலை, அதற்கு பின்னால் கொஞ்ச தூரம் போனால் அந்த மையம் . அங்கு செல்லும் போது சிவசக்தி நம்மை ஆசிர்வதிக்கிறது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.


Saai Sundharamurthy AVK
அக் 03, 2024 14:55

ஒரு இந்துமத மையத்தில் பெண் பிரம்மச்சாரிகள் இருக்க கூடாதா !!! அப்படியானால் கிருஸ்துவ மதத்தில் எவ்வளவு கன்னியாஸ்திரிகள் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு சர்ச் மற்றும் அதன் அமைப்புக்களுக்குள் சென்று சர்வே நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். கோவையில் கிறிஸ்துவர்களின் காருண்யா மையம் விரிவடைய தடையாக இருப்பது இந்துமத ஈஷா மையம். இந்த மையத்தை ஏதாவது செய்து அகற்றி விட முனைப்புடன் இங்கிருக்கும் கிறிஸ்துவ திமுக அரசு முயன்று வருகிறது. இதற்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓக்கள் பெரும் பணத்தை திமுக குடும்பத்திற்கு பிச்சை போடுகின்றனர். இது தான் அந்த ரகசியம்.


GoK
அக் 03, 2024 14:28

கத்தோலிக்க சமுதாயத்தில் உள்ள கான்வென்ட் முறையை குறை கண்டு போப் மீது வழக்கு தொடருவார்களா? சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று சூளுரைத்த வாயை மூடச்செயது வாரிசு அரசியல் செய்யும் குடும்பம் முழுவதையும் சிறையில் தள்ள வேண்டும் அன்று திருந்தும் தமிழ்நாடு


Veera
அக் 03, 2024 13:53

பொது வெளிக்கு வந்த பிறகு ஏன் இந்த பதற்றம்??? மடில கனம் வழியில பயம்?


SVR
அக் 03, 2024 15:13

பொது வெளிக்கு யார் யா வந்தாங்க? அவங்க தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று பிரைவேட் ஆக இருக்கிறார்கள். உனக்கு இன்னொன்னு தெரியுமா? சில மணி நேரம் முன்பு உச்ச நீதி மன்றம் இந்த விவகாரத்தில் காவல் துறை விசாரணை நடத்த கூடாது என்று சொல்லி விவகாரத்தை தன்னிடமே மாற்றி கொண்டுள்ளது. மேலும் அந்த இரண்டு பென்மணிகளுடமும் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் ஆன்லைன் மூலம் பேசி அவர்கள் இருவரும் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதாகவும் தங்களுடைய சொந்த விருப்பங்களுக்கு மையத்தில் யாரும் தலையிடவில்லை என்றும் தங்களுடைய பெற்றோர்கள் சில நாட்கள் முன்பு வந்து தங்களை பார்த்ததாகவும் அதற்குண்டான சிசிட்டிவி வீடியோவையும் ஆதாரமாக தந்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதே வாக்குமூலத்தை மெட்ராஸ் உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு பெயர் தான் திராவிட நீதி. கும்முடிபூண்டிக்கு வடக்கே இந்த வாக்கு மூலத்தை ஏற்று கொண்டு இருக்கிறார்கள். மெட்ராஸ் உயர் நீதி மன்றம் பெஞ்சுக்கு ஜக்கியின் மூஞ்சி ஒரு கால் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. அதனால் ஆர்டர் போட்டு விட்டார்கள். அந்த பெஞ்சை மக்கள் கழுவில் ஏற்ற வேண்டும் என்று அபிப்ராயம் வந்தாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை