உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றும் இஸ்ரோ: தலைவர் நாராயணன் பெருமிதம்

பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றும் இஸ்ரோ: தலைவர் நாராயணன் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை இஸ்ரோ செய்து வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். நாகர்கோவிலில் நிருபர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: 100வது ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிக்கரமாக ஏவியது இந்திய நாட்டுக்கு ஒரு பெருமையான நிகழ்ச்சி ஆகும். 1979ம் ஆண்டு முதன் முதலில் எஸ்.எல்.வி.,3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது எல்லோரும் இணைந்து செய்யும் டீம் வேலை. இதற்கு இஸ்ரோவில் உள்ள அனைவரின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம். இந்திய விண்வெளி துறை பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இதற்கு மக்கள் மற்றும் எல்லோருடைய ஆசீர்வாதமும் தான் காரணம். இஸ்ரோ திட்டங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது; பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை இஸ்ரோ செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajayogan Palanichamy
பிப் 03, 2025 11:03

இஸ்ரோ தலைவர் நாராயணன் பாமர மக்களுக்காக பல பயன் பெறும் திட்டங்களை இஸ்ரோவின் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருவதற்கு மிக்க நன்றி. நூறாவது தடவையாக செயற்கை கோள்களை விண்வெளியில் செயல் படுத்தியுள்ளயதற்கும் மிக்க நன்றி. செயற்கை கோள் மூலமாக இந்தியவின் பாமர மக்கள் யாவருக்கும் பயன் பெறும் வகையில் இலவசமாக அலைகற்றையை வழங்கும்படி இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அப்பாவி
பிப் 02, 2025 19:49

பாமர மக்களுக்கு விண்வெளியிலிருந்து பாஞ்சி லட்சம் போட்டீங்களா?


Ray
பிப் 02, 2025 16:29

ஏதேது இவரும் தேர்தல் களம் காணப்போறாரோ மக்களுக்காவே பாடுபடப்போகிறேன்னு நம்ம அரசியல் வியாதிகள் போலவே ஸ்டேட்மென்ட் உடறாரே வரவர அரசுத்துறை அதிகாரிகள் எல்லாமே போஸ்ட் ரிட்டைர்மென்ட் போஸ்ட்டை எதிர்பார்க்கிறார்கள்போல நாராயண நாராயண


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை