உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.டி., ஊழியர் ஆணவக்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை துவக்கம்

ஐ.டி., ஊழியர் ஆணவக்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி : திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் துவக்கினர்.திருநெல்வேலி கே.டி.சி., நகரில் கடந்த 27 ல் ஐ.டி. நிறுவன ஊழியர் கவின் செல்வ கணேஷ் 27, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டியல் இன வாலிபரான அவர் வேறு சமுதாய பெண்ணை காதலித்ததால் அப்பெண்ணின் தம்பி சுர்ஜித் 23, இக்கொலையை செய்தார். இதில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருக்கலாம் என புகார் கூறப்பட்டதால் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சரவணன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பட்டாலியன் போலீசிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியன் போலீசிலும் எஸ்.ஐ., ஆகவும் உள்ளனர். இருவரும் சம்பவத்தின் போது அங்கு இல்லை. எனினும் கவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு திரும்ப பெறாமல் போராட்டங்கள் தொடர்வதால் நேற்று இரவு எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

திருநெல்வேலி மாநகர போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதால சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான குழுவினர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். கேடிசி நகரில் கவினின் காதலி சுபாஷினி பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கேடிசி நகரில் கொலை நடந்த பகுதியில் ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Sasikumar Yadhav
ஜூலை 31, 2025 23:06

அவனை வெட்டு அவளை கட்டு என சொன்ன திருமாவளவனை முதல்ல விசாரிக்கனும்


ManiK
ஜூலை 31, 2025 22:23

பேயாட்சி நடக்கிற தமிழ்நாட்டில் கொலை செய்பவர், அவர்களது குடும்பம், நண்பர்கள் எல்லோரும் அரசின்மேல் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். செயல்படாத திமுக அரசு இவர்களை மட்டும் நன்றாக கவனிக்கிறது.


Kayal Karpagavalli
ஜூலை 31, 2025 22:02

1. Covid volunteer no e needed. 2.Transplantation no e needed. 3 .Hospital help no e needed. 4.Voting no e needed. 5.Calamity needs no e needed. 6. To look after elderly no e needed. 7.In need of a servant no e needed . 8.In case of emergency help no e needed. Govt should decide what is necessary..... Could have done counselling and make them understand.. .


Ramesh Sargam
ஜூலை 31, 2025 21:51

படத்தில் சிமெண்ட் பூசப்பட்டுள்ளது. அங்கே உண்மை, ஆதாரம் எல்லாம் புதைக்கப்பட்டு சிமெண்ட் பூசப்பட்டுள்ளதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை