உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., வேர் கண்டறிவது சிரமம்

தி.மு.க., வேர் கண்டறிவது சிரமம்

தமிழக அமைச்சர், ரகுபதி கூறியதாவது: தி.மு.க.,வின் வேரை அசைத்துப் பார்க்க முடியாது. அந்த வேர் ஆழமானது; அந்த வேர் எங்கு உள்ளது என்பதை கூட அமித் ஷாவால் கண்டறிய முடியாது. ஸ்டாலினுக்கு பிறகு, உதயநிதி தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். எத்தனை அமித் ஷாக்கள் வந்தாலும், அதை தடுக்க முடியாது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். அதனால், அவர் முதல்வர் ஆக வாய்ப்பே இல்லை என, மக்கள் மத்தியில் அ.தி.மு.க., தலைவர்கள் பிரசாரமே செய்தனர். ஆனாலும், அவர் முதல்வரானார். அதேபோலவே, உதயநிதியும் முதல்வர் ஆவார். பா.ஜ., குறுக்கு வழியில், ஆட்சியில் இருப்பவர்களை மிரட்டிப் பார்க்கிறது. அவர்களுடைய பதவியை பறித்து, ஆட்சிக்கு வர முடியுமா என யோசிக்கின்றனர். அது, பகல் கனவாகவே முடியும்.இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

joe
ஆக 25, 2025 14:30

எவ்வளவு சொத்தை திருடி வச்சுருக்கிறே .அதுல தி மு க வுக்கு எத்தனை % பங்கு


joe
ஆக 25, 2025 14:27

இப்படி கட்டம் கட்டீறீங்க ,திருட்டு சொத்துக்களுக்கு ஆணிவேரே தி மு க தான் . இதுல வேற கட்டம் தேவையா ?இன்னும் எத்தனை பேர்ரா இப்படி கிளம்பீட்டிங்க உழைத்து சம்பாதிக்காம மக்கள் சொத்தை ஏண்டா திருடி விடுகதை போடுறே ?


joe
ஆக 25, 2025 14:20

ஏண்டா ,திருட்டு ஊழல் தி மு க வின் வேரை கண்டுபிடிக்க C B I தேவையா .திருட்டு சொத்துக்கு நீதான் காவல்காரனா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை