உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அ.தி.மு.க.,வினருக்கு சசிகலா அழைப்பு

அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அ.தி.மு.க.,வினருக்கு சசிகலா அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கப்பட்டோர், விலகி இருப்போர் என, அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து, நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்' என, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க.,வின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத நிலையில், கட்சி பெரும் சோதனைக்குள்ளாகி உள்ளது. அவர்கள் வழியில் நடைபோடும் நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம். கட்சியில் இருந்து விலக்கப்பட்டோர், விலகி இருப்போர் என, அனைவரும் கரம் கோர்த்து, ஒன்றிணைந்து, நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

முக்கிய தருணம்

மனமாச்சர்யங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளை கடந்து, கட்சி முக்கியம்; கட்சியின் வெற்றி முக்கியம் என்பதை உணர்ந்து, நாம் செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது.தி.மு.க.,வை ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், அரசியல் களத்தில்இருந்தும், அப்புறப்படுத்த வேண்டும் என, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடுபட்டனர். அந்த தி.மு.க., மீண்டும் வென்று, ஆட்சி அமைக்கும் சூழலை, நாம் உருவாக்கி விடக்கடாது.அதனால்தான் கட்சி ஒன்றுபட குரல் கொடுக்கிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது. கட்சியினர் யார் மீதும் எனக்கு வருத்தமோ, கோபமோ இல்லை. அனைவருடனும் ஒன்றிணைந்து கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன். கட்சி நலன், தமிழக மக்கள் நலன் கருதி, ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறேன்.கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு என்னால் எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணி, தேர்தல் களத்தில் அமைதி காத்தேன். ஆனால், கட்சி வெற்றி பெறவில்லை.அதன்பின் நடந்த எந்த தேர்தலிலும், கட்சி வெற்றி பெற முடியாமல் இருப்பது, மிகவும் வேதனை அளிக்கிறது. இனியும் வேடிக்கை பார்ப்பது, மறைந்த நம் தலைவர் களுக்கு செய்யும் துரோகம்.எனவே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்என்ற மனதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைவதுதான், தமிழக மக்களுக்கு நாம் செய்கிற மிகப்பெரிய உதவி.வெற்றிக்கான பாதை தனி ஆவர்த்தனம் செய்வதால், வெற்றி என்ற இலக்கை அடைவது மிக கடினம். இதை உணர்ந்தால் தான், ஆட்சிக்கட்டிலில் அ.தி.மு.க., அமரும். ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வையே, தமிழக மக்களும், தொண்டர்களும் விரும்புகின்றனர். கூட்டணி கட்சியினரும் இதையே விரும்புகின்றனர். எனவே, கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ப.சாமி
ஆக 31, 2025 20:24

சின்னம்மா அரசியல்வாதியும் இல்லை.அரசு அதிகாரியும் இல்லை.எந்த பதவியும் இல்லாமலே கொள்ளையோ கொள்ளை அடித்து ஜெயிலுக்கு போன இந்த அம்மாவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தால் தமிழ் நாட்டின் நிலை என்னவாகும்?


M Ramachandran
ஆக 31, 2025 20:07

எப்படியும் பழனிக்கு ஆப்பு வச்சிடணும்னு முனைஞ்சு இக்குறீங்க உங்க வலையில் சிக்க மாட்டேன்னு ஆடம் பிடிக்கிறாரே. அவர் பயந்த சுவாபவம் உஙகளுக்கு தெரியுது. ஆனா அவ்ரை சாவி கொடுத்து முன்னிறுத்தி இருப்பவர்கள் கில்லாடிகள் போல் தெரியுதே.


Mecca Shivan
ஆக 31, 2025 19:05

ஜெயலலிதாவின் கோரமான முடிவிற்கும் அவர் மீது ஊழல் கரைபடிந்ததற்கும் காரணம் இவர் குடும்பம்தான் .. மன்னார்குடியில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சென்னையில் கூட டி நகரில் பல லட்சங்கள் மதிப்புள்ள சொத்துகளை ஆட்டைய போட்ட குடும்பம் இது . அதிமுக அழியவேண்டுமென்றால் இவர்களை சேர்த்துக்கொள்ளலாம்


V RAMASWAMY
ஆக 31, 2025 18:42

கர்ம வினை சும்மா விடாது. அதான் மூலையில் உட்கார்த்தி விட்டாச்சே, இனி ஒய்வு எடுக்கவேண்டியது தானே. கோயில் கோயிலாகச் சென்று பாவ மன்னிப்பு கோரி வரவேண்டிய காலம் இது.


Raja k
ஆக 31, 2025 17:35

உங்க தலை மேல மோடி கை வச்ச போதே, நீங்க காலி, அவங்க பேச்சை கேட்டு இப்படி எல்லாத்தையும் இழந்துட்டிங்களே


magan
ஆக 31, 2025 17:19

நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் சும்மா இருந்தாலே போதும் உங்கள் போயஸ் கார்டனில்


Rajah
ஆக 31, 2025 17:09

மதச்சார்பின்மை, ஜாதி பற்றி பேசும் திராவிடக் கட்சிகள் இவை இரண்டையும் அடிப்டையாக வைத்தே வாக்காளர்களை தேர்வு செய்கின்றார்கள். அந்த வகையில் பார்த்தால் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று சசிகலா கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். தென் மாவட்டங்களில் வெல்ல வேண்டுமென்றால் இதைச் செய்வதில் தவறில்லை .அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை. திமுக விஞ்ஞான ரீதியாக ஊழலை செய்வதால் கொஞ்சம் முன்னிலையில் இருக்கின்றார்கள். வாக்காளர்கள் திருந்தும்வரை தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது. இந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சாபக்கேடு.


pakalavan
ஆக 31, 2025 16:41

கரடியே காரி உமிழும்,


SENTHIL NATHAN
ஆக 31, 2025 16:15

தேவையில்லாம சவுண்டு விடரதுனூ இததாண் சொல்வாக


ராமகிருஷ்ணன்
ஆக 31, 2025 15:13

புகழ்பெற்ற பழைய கும்பல் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லது இல்லை. இவர்களால் பி ஜே பி க்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்


சமீபத்திய செய்தி