உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மாவகம் என பெயர் வைத்திருக்கலாம்

முதல்வர் மாவகம் என பெயர் வைத்திருக்கலாம்

சென்னை : 'பலமுறை கோரிக்கை வைத்தும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காததால், அடிப்படை செலவுகளை சமாளிக்க, முதல்வர் மருந்தகங்கள் தற்போது மாவு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மக்கள் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காக செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், முதல்வர் மருந்தகம்.கடந்த பிப்., மாதம் துவக்கப்பட்ட இத்திட்டம், துவக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது.பலமுறை கோரிக்கை வைத்தும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட அடிப்படை செலவுகளை சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர், மருந்தக உரிமையாளர்கள். பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர்.இதற்கு பேசாமல், 'முதல்வர் மாவகம்' என்று பெயர் வைத்திருக்கலாம். நான்கு ஆண்டுகளாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சிக்கு, இந்த பெயர் மிக பொருத்தமாக இருந்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram
ஜூன் 21, 2025 13:19

தி மு க அரைச்ச மாவை அரச்சு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கு


Lakshminarasimhan
ஜூன் 21, 2025 07:44

சுறா பாணத்தை தேடுவோம்?


Mani . V
ஜூன் 21, 2025 04:31

ஹல்லோ இப்ப மாவு விற்பதால் மாவகம் என்று சொன்னால், பிற்காலத்தில் சோமபானம் விற்போம் அப்பொழுது என்ன சொல்வீர்கள்? எது சோமகமா?


சமீபத்திய செய்தி