உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போன் கடை உரிமையாளர் வீட்டில் ஐ.டி., சோதனை

போன் கடை உரிமையாளர் வீட்டில் ஐ.டி., சோதனை

சென்னை:வரி ஏய்ப்பு புகாரில், தனியார் மொபைல் கடை உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.கோடம்பாக்கம் யுனைடெட் காலனியில் உள்ள அவரது வீட்டில், நேற்று காலை 7:35 மணிக்கு, வருமானவரித்துறை அதிகாரிகள் ஏழு பேர் சோதனையில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணையில் உள்ள குடியிருப்பு மற்றும் பல்லாவரத்தில் சில இடங்களிலும், 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர். நேற்று இரவு வரை சோதனை நடந்தது. சோதனை நிறைவடைந்த பிறகே, முழு விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி