உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளையாட்டு துறையையும் கவனிக்கலாமே என தோன்றுகிறது: முதல்வர் பேச்சு

விளையாட்டு துறையையும் கவனிக்கலாமே என தோன்றுகிறது: முதல்வர் பேச்சு

சென்னை: '' துணை முதல்வர் உதயநிதியின் சிறப்பான பணியை பார்க்கும்போது, விளையாட்டு துறையையும் நானே கவனிக்கலாமே என எனக்கு தோன்றுகிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: விளையாட்டு துறையில் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. தேசிய தொடராக, சர்வதேச தொடராக இருந்தாலும் உயர் தரத்துடன் நடத்தும் இடமாக தமிழகம் வளர்ந்துள்ளது. நமது தமிழக வீரர்கள் ஒவ்வொருவரும், வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கின்றனர். இதற்காக பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.விளையாட்டை வளர்க்க, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க உரிய அங்கீகாரம் வழங்க 37 கோடி ரூபாய் பரிசுத்தொகையோடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் எப்படிப்பட்ட உயரம் அடைகிறது என இளைஞர்களுக்கு தெரியும். பொருளாதாரத்தில் எந்த மாநிலமும் சாதிக்காத இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம்.இந்த சாதனை விளையாட்டு துறையில் எதிரொலிக்கிறது. அது இன்னும் எதிரொலிக்கும்.திறமையாளர்கள் எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறோம்.அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் கோப்பை தொடரை உருவாக்கினோம். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம்.தமிழகம் போன்று வேறு எந்த மாநிலமும் விளையாட்டு துறைக்கும், வீரர்களுக்கும் உதவிகள் செய்தது இல்லை. எத்தனை விருதுகள் தமிழகத்தைத் தேடி வந்தாலும், விளையாட்டை வாழ்க்கையாகத் தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்கும் இத்தனை ஆயிரம் மாணவர்களின் நம்பிக்கை தான் பெரிய விருது. எளியவர்களின் வெற்றி தான் நமது அரசின் வெற்றி.பல திட்டங்கள் மூலம் ஏழை வீரர்களின் கனவை அரசு நிறைவேற்றுகிறது. அவர்களும் சாதனை செய்து நமது பெருமையை காப்பாற்றுகின்றனர். நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்த போது ஏராளமான பணிகளை செய்ததை பார்த்த முதல்வராக இருந்த கருணாநிதி விழா ஒன்றில் பேசும் போது, எனது துறையில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசி, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கலாமோ என தோன்றுகிறது' என்றார். இன்று அதே ஏக்கம் எனக்கு வந்துள்ளது. நானே விளையாட்டு துறையையும் கவனித்து கொள்ளலாமே என எனக்கு தோன்றுகிறது. காரணம், உதயநிதியின் பணி அவ்வாறு உள்ளது. அவரின் பணி இன்னும் சிறக்க வேண்டும். தமிழக வீரர்கள் இன்னும் வெற்றிகளை குவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவோம் உங்களின் திறமையால் தமிழகம், இந்தியாவுக்கு பெருமை தேடி தாருங்கள் வாய்ப்புகளை நிறைவேற்றி தர முதல்வராக நானும், அமைச்சராக உதயநிதியும் இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

சிட்டுக்குருவி
அக் 14, 2025 21:33

மீதி எல்லாத்துறையிலும் ஈரம்வறண்டுபோச்சோ .இதிலேதாவது மிச்சம் மீதி விடப்பட்டிருக்கோ .கவனிங்க கவனிங்க ,நல்லா கவனிங்க


Murugesan
அக் 14, 2025 21:12

ஆண்டவா சீக்கிரமாக கல்கி அவதாரம் எடுத்து இந்த கேவலமான கேடுகெட்ட அயோக்கியர்களை அழித்து விடு ,இந்த பேரண்டத்தில் மிக கொடிய மோசமான பிறவி இந்த குடும்பம் தான்


Krishnamurthy Venkatesan
அக் 14, 2025 21:03

விளையாட்டு துறை அமைச்சர் தனது பணியினை சரி வர செய்யவில்லை என்றுதானே அர்த்தமாகிறது.


Modisha
அக் 14, 2025 20:55

ஒருவர் செயல்பாடு மோசமாக இருந்தால் தான் , சே நாமே அதை செய்திருக்கலாம் என்று தோன்றும். கருணை , ஸ்டாலின் ரெண்டு பேருக்கும் நேரடி சிந்தனையே வராது . தலைகீழ் யோசனை தான் வரும். அறிவாளிகள் .


Raj S
அக் 14, 2025 20:49

பேசாம உங்களோடத அவருக்கு குடுத்துட்டு, அவரோடத நீங்க எடுத்துக்கோங்க... இல்லனா அப்பல்லோ தான் கூடிய சீக்கிரம் உங்களுக்கும்


Venkat esh
அக் 14, 2025 20:41

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படித்தான் இப்படி பேச முடியுதோ? கட்சிக்காரானே காறித்துப்பும் அவலம் தான் இவர்கள் மாடலோ


Palanisamy Sekar
அக் 14, 2025 20:39

அந்த கார் பந்தயம் யாருக்காக நடந்துச்சுன்னு சொல்லி அதுபோல நீங்களும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள ஆசைப்படுவீங்க தலீவரே உங்களைப்பார்த்தால் கல்லூரி மாணவரை போலவே தோற்றம் தருவதால் நீங்களும் அதற்கு ஆசைப்படலாமே


Palanisamy Sekar
அக் 14, 2025 20:34

அப்பாவை தலீவர் என்று மகன் புகழ்வதும், மகனைப்பார்த்து தோப்பனார் புளங்காகிதம் அடைவதும் நம்ம தமிழ்நாட்டில்தான் காண முடியும். ஒவ்வொரு முறையும் தன்னை மாணவன் என்றே எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று பெருமை பேசுவதும், தன்னைத்தானே புகழ்ந்துகொள்வதும் நம்ம வாக்காளர்கள் செய்த தவம் இது. புண்ணியம் இது. உலகத்தில் வேறு எங்கேனும் இந்துமாதிரி கேள்விப்பட்டீங்களா என்று சொல்லுங்கள் தெய்வங்களே. உடம்பெல்லாம் புல்லரிக்குமே உ பிக்களுக்கு


VenuKopal, S
அக் 14, 2025 20:21

சிங்கம் 1 சினிமாவில் prakash ராஜ் வசனம் சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகள் பற்றி...நினைவுக்கு வருகிறது இவன் என்னடான்னா அவன பில்ட் அப் பண்றான் அவன் என்னடான்னா இவன பில்ட் அப் பண்றான் என்ற வசனம் மிகப் பொருத்தம்


Easwar Kamal
அக் 14, 2025 20:18

ஆட்சி முடியப்போகுது எல்லாம் தோன்றும் .


முக்கிய வீடியோ