மேலும் செய்திகள்
தவெக விஜய்க்கு ராஜபக்சே மகன் வாழ்த்து
2 hour(s) ago | 1
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
9 hour(s) ago | 21
சென்னை:கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளதால், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளது. இதனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும்.மற்ற மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். பகலில் வறண்ட வானிலை நிலவும். நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில், இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி ஏற்படும்.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 1
9 hour(s) ago | 21