உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெகபர் அலி கொலை வழக்கு: உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

ஜெகபர் அலி கொலை வழக்கு: உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை விவகாரத்தில், உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்கவும், அதை வீடியோ பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி. சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=png0alml&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள், அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர். மாநில அளவில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.இந்நிலையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஜெகபர் அலியின் மனைவி மரியம் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியதாவது:சுற்றுச்சூழல் ஆர்வலரான என்னுடைய கணவர் கடந்த 17ம் தேதி மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வரும் பொழுது டிப்பர் லாரியால் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் புகார் பதிவு செய்ய தயக்கம் காட்டினார்கள். சாலை விபத்தில் எனது கணவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த கணவரின் உடல் ஜனவரி 18ம் தேதி மாலை 4 மணியளவில் புதைக்கப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்டாலும் அறிக்கை தரப்படவில்லை. உடற்கூராய்வு சான்றிதழ் பத்து நாட்களுக்குப் பின் வழங்கப்பட்டது. உடற்கூராய்வு உரிய முறைகளை பின்பற்றி நடத்தப்படவில்லை.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உடற்கூராய்வு செய்த மருத்துவர் ஆஜராகி லாரி ஏற்பட்டதில் எலும்பு முறிவுகள், உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயம் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தார். எக்ஸ்ரே எடுக்க வேண்டியது அவசியம். கூடுதல் ஆவணமாக அமையும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி நிர்மல்குமார், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட எக்ஸ்ரேவிற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். திருமயம் தாசில்தார் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் ஜெகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.இவ்வாறு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 30, 2025 20:37

உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுப்பதால், குற்றவாளிகள் அகப்படுவார்களா? இந்நேரம் அந்த குற்றவாளிகள் பத்திரமாக, மிக பத்திரமாக ஏதாவது ஒரு அரசியல்வாதியின் வீட்டில் தஞ்சம் அடைந்திருப்பான்.


முகவை காளிதாசன்
ஜன 30, 2025 20:22

அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் குவாரி உரிமையாளர் தன்னுடைய கையில் வைத்து இருந்த தைரியம் தான் , குவாரி லைசன்ஸ் புதுப்பிக்க வில்லை , மற்றும் சினிமா பாணியில் கொலை செய்யும் துணிச்சல் , நீதிமன்றம் தான் சமூக சேவகர்களுக்கு கடைசி நம்பிக்கை


தமிழ்வேள்
ஜன 30, 2025 20:18

ஷரீஅத் படி புதைத்த உடலை தோண்டி எடுத்து ஹராம் என்று ஏதாவது மார்க்க மூர்க்க அல்லக்கை மூலமே திருட்டு திராவிடம் கோர்ட்டில் கேஸ் போட்டு இழுத்தடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது..


sridhar
ஜன 30, 2025 19:07

இந்த அரசுக்கு நெருக்கமானவர்களை எதிர்த்தால் முஸ்லீம் என்று கூட பார்க்கமாட்டார்கள்.


raja
ஜன 30, 2025 17:30

என்ன செஞ்சாலும் உச்ச மன்றம் சம்பந்த பட்ட திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற விடியா மாடல் அரசு நடத்தும் இருபத்தி மூனாம் புலிகேசியின் மங்குனிகளை விடுதலை செய்யும்...


கண்ணன்,மேலூர்
ஜன 30, 2025 17:24

திமுகவின் திராவிடமாடல் ஆட்சியில் மனித உயிர்களுக்கு பாதுகாப்பும் மற்றும் மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றங்கள் பல்கி பெருகி விட்டன வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்கா விட்டால் அப்போதைய நிலைமை இதை விட மோசமாகப் போய்விடும்.


Ramasamy
ஜன 30, 2025 17:24

கயவர்கள் ஆட்சி ,


புதிய வீடியோ