உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாக்டோ ஜியோவின் அடுத்த போராட்ட அறிவிப்பு; ஏப்.22ல் பேரணி, மே 25ல் மாநாடு

ஜாக்டோ ஜியோவின் அடுத்த போராட்ட அறிவிப்பு; ஏப்.22ல் பேரணி, மே 25ல் மாநாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : அரசு ஊழியர், ஆசிரியர்கள் அமைப்பினர் பல்வேறு சங்கங்கள் அமைத்து தங்கள் துறை சார்ந்த கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். அதேசமயம் பொதுவான கோரிக்கைகளான புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அகவிலைப்படி, சரண்டர் விடுப்புக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு பொது அம்சங்களுக்கு போராட கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ ஜியோ) உருவாக்கப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த தீவிரம்காட்டி வருகின்றனர். இதற்காக பலமுயற்சிகளை மேற்கொண்டும் நிறைவேறவில்லை.கடந்த ஜனவரியில் இக்குழுவினர் 4 கட்ட போராட்டங்களை நடத்த முடிவெடுத்தனர். இதில் ஒருபகுதியாக பிப்.,25ல் மறியல் நடத்த இருந்த சூழலில் 4 அமைச்சர்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்து நான்கு வாரம் அரசு அவகாசம் கேட்டது. அதனால் ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு, ஆர்ப்பாட்டமாக நடந்தது.பின்னர் மார்ச் 13 ல் மீண்டும் ஜாக்டோ ஜியோவை அழைத்த அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. தொடர்ந்து பட்ஜெட்டிலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து மார்ச் 23ல் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இப்படி போராட்டங்கள் நடந்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் சமீபத்தில்சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் கூடி ஆலோசித்து புதிய போராட்டங்களை அறிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, காலவரையின்றி முடக்கி வைத்துள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளிலும் 30 சதவீத்திற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசேகரன், குணசேகரன், முருகையன், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் அடுத்த கட்டமாக ஏப்.,22 ல் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்துவது என்றும், மே 24 ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

J.Isaac
ஏப் 10, 2025 21:29

இவர்களுக்கு அரசு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். முதலில் இவர்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.


Rajarajan
ஏப் 10, 2025 06:37

அரசு ஊழியர்களுக்கு வாரி வாரி வழங்கி, அதனால் அரசின் கஜானா கவிழ்ந்த நிலைக்கு தெலுங்கானா மாநிலம் வந்துள்ளது. இதை உணர்ந்து, இனி அரசு ஊழியருக்கு பஞ்சபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்சபடி என்பது அரசு ஊழியருக்கு அவ்வப்போது வழங்கப்படும் டிப்ஸ் போன்றது. இது ஒவ்வொரு அரசுக்கும் தீராத தலைவலி. பொதுமக்களுக்கு மறைமுக சுமை. இதனால் தான், எரிவாயு, பெட்ரோல் / டீசல் மற்றும் சுங்க நுழைவு கட்டணம் அவ்வப்போது உயர்கிறது. பெரும்பாலான அரசு நிறுவனங்கள் / துறைகள், பொதுத்துறை நிறுவனங்களே தற்போது வேண்டாம் எனும் போது, இவைகள் அரசின் மற்றும் பொதுமக்களின் தீராத வீண் சுமைகள். தனியாரில் பஞ்சபடி, வேலை நிரந்தரம் இல்லை. ஏன் அவர்கள் பிழைக்கவில்லையா ?? வரி செலுத்தவில்லையா ?? இதுவே முதல்வர் / பிரதமர் / அமைச்சர்கள் தங்கள் வீட்டு கஜானா என்றால், இப்படி வாரி வாரி வழுங்குவாரா ?? அரசின் கஜானாவை நிரப்ப தனியார் இருக்கின்றனர், எவ்வளவு அடித்தாலும் தாங்குவர், நல்லவர் என்பதால் தானே, அவர்கள் ஒப்புதல் இல்லாமல், வரி மற்றும் விலைவாசியை உயர்த்திக்கொண்டு உள்ளனர். இதுபற்றி, எந்த தனியார் ஊடகமாவது விவாத நிகழ்ச்சி நடத்தியதுண்டா ?? மசால்வடைக்கு மொறுமொறுப்பு போதவில்லை / உளுந்து வடையில் எண்ணெய் அதிகமாக உள்ளது போன்ற பொறுப்பான விவாதம் தான் நடத்துவரோ ?? தனியாரில் வேலையில் இல்லை எனில், அந்த ஊழியர் மற்றும் நிர்வாகத்திற்கான உறவு முடிந்தது. ஆனால், அரசு ஊழியரெனில், பணிக்காலம் முடிந்தாலும், ஏதோ ஒரு வகையில் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு, ஊழியர் சங்கம் என்று ஒன்று வீதி கூட்டம் ஒன்று கூடி, மேய்கிற மாட்டை, சும்மா இருந்த மாடு கெடுத்த கதையாக, வேலை செய்யவிடாமல், வெட்டி போராட்டம் என்று கெடுத்துக்கொண்டே இருப்பர். அரசுகளும், வோட்டு வங்கிக்காக, இவர்களை ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக வைத்து, கஜானாவை வாரி வாரி கொடுத்துக்கொண்டே இருப்பர். இதற்கு வரி டாப் அப் செய்ய இளிச்சவாயன் தனியாரிடம் தான் பிடுங்குவர். இதில் அந்த கட்சி, இந்த கட்சி, சர்வ கட்சியும் அடங்கும். எதிரி நாடுகளுக்கு சவால் விட்டு மேடையில் முழங்கும் பிரதமர் முதல் முதல்வரை, உள்நாட்டு இந்த பூனைக்கு மணி கட்ட முடியவில்லை. பின்னர் வீராப்பு எதற்கு ? இவர்களால் பொருளாதாரம் முட்டுக்கட்டை தான் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு, அடுத்த கட்டத்திற்கு வேகமாக எடுத்துச்செல்ல முடியாமல், கஜானா ஓட்டை. இதுபற்றி பொதுவிவாதம் நடத்த எந்த மத்திய மற்றும் மாநில நிதி அமைச்சரும், பிரதமர் மற்றும் முதல்வரும் தயாராக இல்லை. ஆகமொத்தம், தனியார் ஊழியர் என்பவர், அரசு ஊழியருக்கும், அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து, அவர்கள் குடும்பத்தை சேர்த்து மறைமுகமாக தாங்கும் ஒரு சுமைதாங்கி. இதனால் அவ்வப்போது ஏறும் விலைவாசியை தாங்கும் ஒரு நேரிடை இடிதாங்கி. அவ்வளவே. இந்த பூனைக்கு யார் எப்போது தான் மணிக்கட்டுவரோ ?? இறைவா, உனக்காவது இது தெரியுமா ??


srinivasan
ஏப் 10, 2025 04:31

இவர்கள் போராட்டங்களை அறிவித்து தேர்தல் நேரத்தில் இந்த விடியா அரசுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இப்போது நன்றாக அனுபவியுங்கள்.


Kasimani Baskaran
ஏப் 10, 2025 03:40

தீமகாவை நம்பி ஓட்டுப்போட்டு ஏமாந்த பொறுப்பற்றதுகள். இதுகளிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி வெளங்க முடியும்?


மீனவ நண்பன்
ஏப் 10, 2025 02:41

மாநாடு …மயிலாடு ..என்று மக்களுக்கு எந்த விதத்திலும் நியாயமாக நடக்காத பணியாளர்களை வேலைய விட்டு துரத்தி அக்னிவீர் மாதிரி ஐந்தாண்டு அல்லது பத்தாண்டு அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் அல்லது TCS போன்ற கம்பெனிகளுக்கு இந்த வேலைகளை ஒப்படைக்கலாம்


Murthy
ஏப் 10, 2025 02:30

பஞ்சபடிக்கும் அகவிலைப்படிக்கும் ஓட்டை விற்கும் கூட்டம்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை