உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; ஒருவர் பலி; 41 பேர் படுகாயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; ஒருவர் பலி; 41 பேர் படுகாயம்

மதுரை: பெரும் எதிர்பார்ப்புகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து சுற்று போட்டிகளும் நடந்து முடிந்தது. இந்த போட்டிகளில் பங்கேற்ற மாடுபிடி வீரர் நவீன் குமார் மாடு முட்டி உயிரிழந்தார். 41 பேர் காயமடைந்தனர்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவு பெற்றது. இதில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9z4380sw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குன்னத்தூர் திவாகர் 15 காளைகளையும், முரளிதரன் 13 காளைகளையும் பிடித்து 2 மற்றும் 3ம் இடங்களைப் பிடித்தனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு (ஜன.14) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அறிவித்தபடி இன்று நடந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு உரிய முறையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. காளைகள் ஏற்கனவே பெற்றிருந்த பதிவு எண்ணின்படி வரிசையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காளையின் உடல்நிலை எப்படி உள்ளது, அதன் வயது, ஊக்க மருந்து ஏதேனும் பயன்படுத்தப்பட்டு உள்ளதா, கொம்பின் அளவு என்ன என அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே களத்தில் இறக்கிவிடப்பட்டன. பின்னர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. விதிகளை மீறிய வீரர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதேநேரம், போட்டி விதிகளுக்கு உட்படாத காளைகள், பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.9 சுற்றுகள் முடிவில், மாடுபிடி வீரர்கள் 16 பேர், காளை உரிமையாளர்கள் 13 பேர் உள்பட 41 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த டேவிட் வில்சன் என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.ஜல்லிக்கட்டை முன்னிட்டு கிட்டத்தட்ட 2000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 888 காளைகள் களத்தில் இறக்கி விட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.அவனியாபுரத்தில் சோகம்:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில், மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன்குமார், 22, உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலையில் இன்று மதியம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

theruvasagan
ஜன 14, 2025 22:12

தமிழர்களின் வீர விளையாட்டு. இல்லைன்னு சொல்லலை. ஆனால் ஒரு உயிர் பறி போனதே. 41 பேர் காயம் அடைந்தார்களே.அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து உணர்ச்சி வெள்ளமாக போராட்டம் நடத்தினவர்கள் இந்த இழப்புகளை ஈடுகட்டுவார்களா.


ஆரூர் ரங்
ஜன 14, 2025 21:31

கடந்த ஆண்டுகளில் பல பார்வையாளர்களும் கொல்லப்பட்டனர். அதுவும் திறந்த வெளியில் நடந்த மாடுபிடி விளையாட்டில் எங்கோ இருந்த சம்பந்தமில்லாத நபர்கள் கூட காயமடைந்தனர். இன்னும் இந்த அராஜகம் நீடித்தால் கோர்ட் மீதும் நம்பிக்கை போய்விடும். நீதியரசர் பானுமதி அவர்கள் அளித்த பழைய தீர்ப்பை மீண்டும் அமலாக்க வேண்டும்.


Svs Yaadum oore
ஜன 14, 2025 21:21

ஜல்லிக்கட்டு என்பது நாட்டு மாடுகள் வளர்ப்பு சம்பந்தப்பட்டது ....தமிழ் நாட்டில் நாட்டு மாடுகள் இனம் வெகுவாக குறைந்துவிட்டது ....மாடுகள் இல்லாமல் விவசாயம் மனித வாழ்க்கை சாத்தியம் இல்லை ...நாட்டு மாடுகள் இனம் உயிர்ப்பிக்க ஜல்லிக்கட்டு அவசியம் தேவை ...இது போன்ற ஜல்லிக்கட்டு வேறு பெயர்களில் கர்நாடக ஆந்திராவிலும் உள்ளது ...இதை பாதுகாப்பாக நடத்த வேண்டும் ....சென்னையில் சாலை போக்குவரத்தில் தினம் ஒருவர் விபத்தில் பலி ...அதற்காக சாலை போக்குவரத்துக்கு தடை செய்ய முடியுமா?? ....மனித உயிருக்கு இங்கு மதிப்பில்லை ..ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடத்த அக்கறையில்லை ...அதுதான் காரணம் ...


Bye Pass
ஜன 14, 2025 20:34

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் மற்றும் முறையான பயிற்சி பெற்றவர்கள் இந்த மாதிரி விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள்


SK
ஜன 14, 2025 20:14

மாடு வளப்பது சரி ஆனால் ஜல்லிக்கட்டு தேவையில்லை.


Duruvesan
ஜன 14, 2025 20:13

விடியல் சார் உடனே கிளம்பு, நிவாரணம் மக்கள் காசுல, ஸ்டிக்கர் கருணாநிதி பேர்ல இருக்கட்டும். அண்ணா பல்கழை, கவர்னர், அந்த ஈரோடு வெங்காயம் எல்லாம் மக்கள் மருந்துடுவாங்க, நம்ம டிவி எல்லாத்துலயும் இதே நியூஸ் இருக்கும், எல்லோருகும் விடியல்


இறைவி
ஜன 14, 2025 20:00

தினசரி நூற்றுக்கணக்கான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. அதனால் சாலை போக்குவரத்தை நிறுத்தி விடலாமா? டாஸ்மாக்கி்னால் பல இளைஞர்களின் உயிர் பரி போகிறது. ஏன் டாஸ்மாக்கை மூடவில்லை. எவ்வளவு பாதுகாப்பு உபகரணங்களுடன் செய்தாலும் பெரிய கட்டுமான திட்டங்களில் சில சாவுகள் நடந்துதான் தீர்கிறது. காலம் காலமாக நடக்கும் ஒரு வீர விளையாட்டை நிறுத்திவிட்டு நாம் இங்கு போய் தமிழ் கலாச்சாரம் பேசுவது. முன் ஜாக்கிறதையுடன் விளையாடினால் சாவு தவிர்க்கக் கூடியதே.


Ravi Kumar
ஜன 14, 2025 19:40

சுயோ மோட்டோ , உச்ச நீதி மன்றம் , உயிர் பலி . தை ஒன்றாம் தேதி. அரசு பரிசு .


vbs manian
ஜன 14, 2025 19:27

இந்த வி ளையாட்டு வேண்டுமா. அந்த குடும்பத்துக்கு பதில் என்ன.


தமிழ்வேள்
ஜன 14, 2025 19:18

ஒரு நேரத்தில் ஒரு வீரன் ஒரு மாட்டை மட்டுமே அடக்க முயற்சி செய்யவேண்டும்.. அதுதான் சரியான விதி... கும்பலாக ஒரே மாட்டை விரட்டி அதை மிரளச்செய்து மிதி முட்டு வாங்குவது வீரம் அல்ல பெரும் கேணத்தனம்....இதில் சாராயம் சாதி போதை வேறு.....


முக்கிய வீடியோ