| ADDED : ஜன 04, 2024 03:18 PM
மதுரை: மதுரையில் அலங்காநல்லூரில் ஜனவரி 17, பாலமேட்டில் 16, அவனியாபுரத்தில் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும் என கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் காளைகள் பங்கேற்கும். தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த ஜல்லிக்கட்டை பார்க்க உள்ளூர், வெளி மாநிலம் மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.இந்நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அவனியாபுரத்தில் 15ம் தேதியும், பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17 ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என அறிவித்து உள்ளார்.இதனையடுத்து காளைகளை தயார்படுத்தும் பணிகளில், அதனை வளர்ப்போர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.