உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லிக்கட்டு பந்தல்கால் நடும் விழா :உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம்

ஜல்லிக்கட்டு பந்தல்கால் நடும் விழா :உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம்

அவனியாபுரம் :அவனியாபுரத்தில் ஜன.,15ல் நடக்கும் ஜல்லிக்கட்டுக்காக திருப்பரங்குன்றம்- ரோட்டில் தற்காலிக வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில்பூமி பூஜை, பந்தல்கால்நடும் பணி நேற்று நடந்தது. 'அவனியாபுரம், அலங்காநல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.பந்தல்கால் நடும் நிகழ்ச்சியை அமைச்சர்துவக்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், எம்.எல்.ஏ., பூமிநாதன், துணைமேயர்நாகராஜன், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அமைச்சர் கூறியதாவது: மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கிராம மக்கள் ஒன்றிணைந்து நிரந்தர வாடிவாசல் அமைக்க இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆலோசித்து முடிவெடுப்பர். உள்ளுரில் இருப்பவர்கள் வெளியூர் காளைகளை கொண்டு வந்து உள்ளூர் காளைகள் என கூறுவதால்தான் பிரச்னை வருகிறது. சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதா என கேட்கின்றனர். முன்பு எப்படி இருந்ததோ அதுபோல் தான் தற்போதும் இருக்கும் என்றார்.அலங்காநல்லுார்அலங்காநல்லுாரில் கால்கோள் நடும் நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், பேரூராட்சி தலைவி ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய செயலாளர் தன்ராஜ், விழா குழு ரகுபதி, கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி