மயில் இறகு மாலையுடன் ஜெயந்திநாதர்!
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சஷ்டி 4ம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதருக்கு குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மயில் இறகு மாலை அணிவிக்கப்பட்டது.திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நாள்தோறும் கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. 4ம் திருநாளான இன்று காலை யாகசாலையில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி தங்கச்சபரத்தில் எழுந்தருளினார்.சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபாகரன் என்பவர் ஜெயந்திநாதருக்கும், வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கும் மயில் இறகுகளால் கோர்க்கப்பட்ட மாலையினை அணிவித்து வழிபட்டார். குஜராத்தில் இருந்து மயில் இறகுகள் விமான மூலம் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டு மாலைகளாக்கப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து திருச்செந்தூருக்கு பிரபாகரன் கொண்டு வந்தார். சுமார் 2200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜராத்தில் இருந்து மயில் இறகுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.