தி.மு.க., அழியும் சாபம் விடுகிறார் ஜெயராமன்
திருப்பூர்: அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர், ஜெயராமன் பேட்டி:இதற்கு மேலும் ஹிந்துக்களை கேவலப்படுத்தினால், அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்று சேர்ந்து, தி.மு.க.,வை அடியோடு வேரறுப்பர். பொழுதுபோக்காகவும், நகைச்சுவைக்காகவும், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தத் துவங்கினால், தி.மு.க.,வும், அவர்களை சார்ந்த கட்சியினரும், அடையாளம் தெரியாதபடி விரைவில் அழிந்து போவர். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்து திருந்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.