உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மாட்டுத்தாவணி ஆர்ச் அகற்றியபோது தூண் சாய்ந்து ஜே.சி.பி ஆபரேட்டர் பலி

மதுரை மாட்டுத்தாவணி ஆர்ச் அகற்றியபோது தூண் சாய்ந்து ஜே.சி.பி ஆபரேட்டர் பலி

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள நக்கீரர் தோரண வாயில் நேற்று இரவு இடித்து அகற்றப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qzubko0p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் ஜே.சி.பி., டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பலத்த காயமடைந்தார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு நேரத்தில் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டனர்.மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நுழைவு வாயில்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி சார்பில் நேற்று இரவு 11:00 மணிக்கு மேல் 2 ஜே.சி.பி.,க்கள் மூலம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நக்கீரர் தோரண வாயிலை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடிபட்ட தோரண வாயில் ஜே.சி.பி., வாகனம் மீதே எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சிந்தாமணியை சேர்ந்த நல்லதம்பி, ஜே.சி.பி., டிரைவர் நாகலிங்கம் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயத்துடன் நல்லதம்பி மீட்கப்பட்டார்.ஒரு மணிநேரத்திற்கு மேல் போராடி மீட்கப்பட்ட நாகலிங்கம், உயிரிழந்தார். இதையொட்டி மாட்டுத்தாவணி பகுதியில் அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் மாட்டுத்தாவணி, ஆம்னி பஸ் ஸ்டாண்டுகளுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

MI B
பிப் 14, 2025 06:18

Government machinery to be punished immediately, atleast five people, no fear of Accountability, DMK government to be blamed


Ramesh Sargam
பிப் 13, 2025 12:30

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மற்ற மத கட்டுமானங்களையும், அரசியல்கட்சி தலைவர்களின் சிலைகளையும் இதுபோல திருட்டு திமுக அரசு இடித்து அகற்றுமா...?


Muthu Saravanan
பிப் 13, 2025 11:24

அடுத்து அந்த இடத்தில் கலைஞர் பெயரில் ஆர்ச் வரப் போகுதா.... மீனாட்சி பேருந்து நிலையம் பெரியார் பேருந்து நிலையம் ஆயிடுச்சு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆயிடுச்சு.... இப்படியே போகட்டும்...


எஸ் எஸ்
பிப் 13, 2025 11:23

நன்கு திட்டமிட்டு பகலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நிதானமாக செய்து இருக்க வேண்டும். அநியாயமாக ஒரு தொழிலாளி பலியாகி விட்டார். ஓம் சாந்தி


அப்பாவி
பிப் 13, 2025 10:54

வீடியோவைப் பாத்தேன். தூண் இருக்கும் திசையிலேயே தூனை இடிக்கிறாரு டிரைவர். மேலே விழாம எங்கே விழும்? முதலில் அவருக்கு லைசன்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்க. இந்தியாவில் கண்டவனெல்லாம் எல்லா வித வாகனங்களையும் ஓட்டி ச்சீப்பா வேலையை முடிச்சுத் தரான்.


Venkateswaran Rajaram
பிப் 13, 2025 10:11

பின் விளைவுகளை பற்றி துளியும் கவலைப்படாத திருட்டு திராவிட ஜென்மங்கள்


Venkateswaran Rajaram
பிப் 13, 2025 10:09

இதிலும் எப்படி எளிதாக முடித்து கொள்ளை அடிக்கலாம். இவர்கள் வேலையே கொள்ளை அடிப்பது தான்


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2025 09:57

அரசியல்வியாதிகள் மக்களின் தலைவர்களா ? மக்கள் விரோதிகளா ?


VENKATASUBRAMANIAN
பிப் 13, 2025 07:18

கையாலாகாத அரசு. திட்டமிடுதல் இல்லாததால் ஒரு உயிர் போயிற்று. இதற்கு அரசு என்ன செய்யப்போகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யும் வேண்டும். அவர்களது சொத்தில் இருந்து இறந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் கள்ள சாராயத்தில் இறந்தவருக்கு 10 லட்சம் கொடுத்தது போல் இவரது குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும்.


Raj
பிப் 13, 2025 06:51

ஒரு தூணை இடிப்பதற்கு கூட திட்டம் வகுக்க தெரியாத அரசு. நிர்வாக திறமையின்மை. ஒரு உயிர் போய்விட்டது குடும்பத்திற்கு 3 லட்சம் கொடுத்து முடித்து விடுவார்கள். கேவலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை