உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்

பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் நுாறு அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் இளம் பெண் பலியானார். அடுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் 24. ஊட்டியை சேர்ந்தவர் தீபிகா 22. இருவரும் காதலர்கள். நேற்று முன் தினம் ராஜசேகர் சகோதரியின் திருமணத்திற்கு வந்த தீபிகா நேற்று காலை ராஜசேகர் விவசாய தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றார். சாமக்காட்டுபள்ளம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் நுாறு அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தீபிகா பலியானார். ராஜசேகர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை