உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி; அறப்போர் இயக்கம் சந்தேகம்

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி; அறப்போர் இயக்கம் சந்தேகம்

சென்னை: கூட்டுறவு சங்கத்தில் நீக்கம் செய்யப்பட்ட 44 லட்சம் போலி உறுப்பினர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; கடந்த நவ., மாத இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுமார் 44 லட்சம் பேர் போலி உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து, அரசுக்கு, அறப்போர் இயக்கம் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது1. நீக்கம் செய்யபட்ட 44 லட்சம் உறுப்பினர்கள் பட்டியல் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.2. போலியான 44 லட்சம் உறுப்பினர்களுக்கும் வாழ்நாள் தடை அறிவிக்கவேண்டும்.3. போலியான 44 லட்சம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், தள்ளுபடிகள் போன்ற தொகைகள் உடனடியாக மீட்கப்படவேண்டும்.4. போலியனவர்களை அங்கீகரித்த நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியாக மற்றும் துணைவிதிகள் அடிப்படையில் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.5. போலியாக அவர்களை அங்கீகரித்த மற்றும் கடன்கள் வழங்கிய, மேலும் முறைகேடாக நகைக்கடன் மற்றும் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிகள் பெற்ற குற்றவாளிகள் மீது முதல் தகவலறிக்கை பதிந்து உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என குறிப்பிட்டுள்ளது. இந்தக் கடிதத்தை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bhaskaran
டிச 20, 2024 13:24

கடன்வாங்கியவங்க கட்சிக்காரங்கமட்டுமே


V GOPALAN
டிச 20, 2024 10:39

Our Tamilnadu Co Operative Corruptive credit society loan takers are mostly DMK and ADMK relatives Benamies. Loan against Duplicate Jewels. Every three years after loan interest waivel . This is the history. Nirmala should order RBI to send separate Audit team to check all loan takers in Tamilnadu


C janarthanan
டிச 20, 2024 21:50

முற்றிலும் உண்மையான கருத்து.


Ethiraj
டிச 20, 2024 06:37

Court may consider taking up the case sumoto ,recover all the money paid as well as initiate criminal proceedings on officials ,beneficiary and middlemen. Thise will be detergent to all who try to syphon public funds in the name of election promise and social welfare.measure


சாண்டில்யன்
டிச 19, 2024 23:17

அறப்போர் இயக்கத்துக்கு நன்றி முந்தைய ஆட்சியாளர்கள் சிக்குவது உறுதி


raja
டிச 19, 2024 18:08

சர்க்காரியா சொன்ன விங்யான திருட்டு திராவிட கோவால் புற குடும்ப உடன் பிறப்புகளை ஒன்றும் செய்ய முடியாது....


சாண்டில்யன்
டிச 19, 2024 23:16

ஒரே ஆதார் எண்ணில் பல கடன்கள் மற்றும் வெறும் பொட்டலத்துக்கு நகைக்கடன் தந்த கதையெல்லாம் வெளிக் கொண்டு வந்து தள்ளுபடியை தடுத்தவர் இந்த அமைச்சர் பெரியகருப்பண் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை போரையும் டெபாசிட் இழக்க செய்த சரித்திரம் படைத்தவரும் இவரே


சம்பா
டிச 19, 2024 15:17

வேலயே இதுதான் போல படிந்தால் சரி. படியா விட்டால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை