உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவத்துறை ஊழல் வழக்கு: மாஜி அமைச்சர் கோர்டில் சரண்

மருத்துவத்துறை ஊழல் வழக்கு: மாஜி அமைச்சர் கோர்டில் சரண்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் (என்.ஆர்.எச்.எம்) ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவர் நேற்று சி.பி.ஐ கோர்டில் சரணடைந்தார். கடந்த 2008-2009-ம் ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மாநில சுகாதராத்துறை அமைச்சராக இருந்த ‌ஷாகி என்பவரும், சுகாதராத்துறை செயலாளராக இருந்த பிரதீபர் குமார் ஆகியோரும் ‌கூட்டாக சேர்ந்து தேசிய ஊரக சுகாதார திட்டத்தி்ற்காக மருத்துவ உபகரணங்கள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை வாங்கியதில், முறைகேடு புரிந்துள்ளனர். இதற்காக 19 தனியார் நிறுவனங்களிடமிருந்து மிக குறைந்த விலைக்கு மருத்துவ உபகரணங்களை வாங்கி அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த மே மாதம் நடந்த சி.பி.ஐ. விசாரணையி்ல் தெரியவந்தது. இதையடுத்து கடந்த வெள்ளியன்று மாஜி அமைச்சர் ஷாகி, சுகாதார செயலர் பிரதீப் குமார் ஆகியோரின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கையில் இறங்கியது. இவர்கள் இருவருக்கும் சம்மனும் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் ஷகார் நேற்று சி.பி.ஐ. கோர்டில் சரணடைந்தார். முன்னதாக சுகாதார செயலர் பிதீப்குமார் கடந்த 2009-ம் ஆண்டு சஸ்பென்ட் செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் ஐகோர்ட் இவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ