| ADDED : ஜன 30, 2024 12:29 AM
சென்னை: ஜோயாலுக்காஸ் நிறுவனம், அனைத்து ஆபரணங்களுக்கும் குறுகிய காலத்திற்கு சேதாரம், செய்கூலி மீது, 50 சதவீதம் தள்ளபடி சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகை, தங்கம், வைரம், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வெள்ளி நகைகள் உட்பட ஆபரண அணிவரிசையை உள்ளடக்கியது. இந்த சலுகை, பிப்., 18ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.இதுகுறித்து, ஜோயாலுக்காஸ் குழும தலைவர் ஜாய் ஆலுக்காஸ் கூறியதாவது: ஆபரணங்களை வழங்குவதில் சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். எனவே, எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும்.ஜோயாலுக்காசின் பிரத்யேக திருவிழா, அனைத்து ஷோரூம்களிலும், எங்கள் கலெக் ஷன்கள் மீதும், ஜுவல்லரியின் சேதாரம், செய்கூலி மீதும், 50 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.இந்த சலுகைகயை பயன்படுத்தி, ஜோயாலுக்காசின் வித்தியாசமான அனுபவத்தை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.