| ADDED : பிப் 06, 2024 10:30 PM
சென்னை: ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் பொதுகூட்டம் செயின் ஜார்ஜ் பள்ளியில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.வரும் 11-ம் தேதி சென்னைக்கு வரும் பா.ஜ., தேசிய தலைவர் அன்றைய தினம் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் இதற்காக சோழிங்கநல்லூர், பெருங்குடி, நந்தனம் உள்ளிட்ட இடங்களில் நடத்த பா.ஜ.,தலைவர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர் பொது கூட்டம் நடைபெற்றால பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கூறி போலீசார் அனுமதி மறுத்தனர்.இந்நிலையில்செயின் ஜார்ஜ் பள்ளியில் நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.