உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்பார் இன்றி வெறும் இட்லி; அம்மா உணவகத்தில் அதிர்ச்சி

சாம்பார் இன்றி வெறும் இட்லி; அம்மா உணவகத்தில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பந்தலுார்; பந்தலுார் அம்மா உணவகத்தில் சாம்பார் இன்றி வெறும் இட்லி வழங்கியதால், அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் அதை வாங்காமல் பசியுடன் சென்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் உள்ள அம்மா உணவகத்தை நெல்லியாளம் நகராட்சி பராமரிக்கிறது. இங்கு குறைந்தளவில் காய்கறிகள் வாங்கி கொடுப்பதால் சாம்பார் மற்றும் ரசம் தரம் இல்லாமல் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அரிசி இல்லை எனக் கூறி, இட்லி தயாரிக்க முடியாத நிலை உருவானது. நேற்று காலை, சாம்பாருக்கான காய்கறிகள் வாங்கி தராததால், வெறும் இட்லி மற்றும் சாப்பாடு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் உணவை வாங்கி அப்படியே வைத்து விட்டு சென்றனர் . தொழிலாளர்கள் கூறுகையில், 'காலை நேரத்தில் அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டு பணிக்கு செல்ல வந்தோம். தற்போது, பட்டினியுடன் செல்லும் நிலை ஏற்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

lana
ஆக 30, 2025 12:01

அடுத்து அம்மா உணவகம் மூடல். மாடல் அரசின் சாதனைகளை பட்டியல் இட்டால் நாள் பத்தாது


அப்பாவி
ஆக 30, 2025 10:55

சாம்பாரையெல்லாம் நம்ப ஆளுங்களே குடிச்சிருப்பாங்க. ஆந்திராவில் தமிழர்களின் செல்லப் பெயர் சாம்பார்.


ஆதிநாராயணன்
ஆக 30, 2025 09:23

அருமையான ஒரு திட்டத்தை இப்படி அரசியல் செய்து நாசம் செய்கின்றனர்


vivek
ஆக 30, 2025 07:29

நாளைக்கு இட்லியே இல்லாம இட்லி விப்பாங்கா


Kasimani Baskaran
ஆக 30, 2025 04:57

என்ன ஒரு வில்லத்தனம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை