உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளியேற்றிய அதிமுக எம்எல்ஏ.,க்களை அனுமதியுங்க: சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த முதல்வர்

வெளியேற்றிய அதிமுக எம்எல்ஏ.,க்களை அனுமதியுங்க: சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதற்காக வெளியேற்றிய அதிமுக எம்எல்ஏ.,க்களை மீண்டும் விவாதங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, அதிமுக எம்எல்ஏ.,க்கள் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலரும் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடலூரில் 2001, டிசம்பரில் கள்ளச்சாராயத்தால் 52 பேர் உயிரிழந்து, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். பாமக எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும் இதுகுறித்து சட்டசபையில் பேசியிருந்தனர். தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் எனது கவனத்திற்கு வந்த உடன் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். 2001ல் சரியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை; ஆனால் இப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அதுபற்றி பேசிவிடுவார்களோ என பயந்து, எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சியினரும் பங்கேற்க வேண்டும். எனவே, அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதான எதிர்க்கட்சியினரை கேள்வி நேரம் முடிந்ததும் அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.அதிமுக எம்எல்ஏ.,க்களை மீண்டும் அவையில் விவாதத்திற்கு அனுமதிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று, சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்எல்ஏ.,க்களை விவாதங்களில் பங்கேற்க அனுமதித்தார். ஆனால், சபாநாயகரின் அழைப்பை அதிமுக.,வினர் ஏற்க மறுத்து இன்றைய விவாதத்தை புறக்கணி்ததனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

duruvasar
ஜூன் 21, 2024 18:26

அய்யாவு அய்யா தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டாரா ? இது என்னடா புது புரளி ?


N Sasikumar Yadhav
ஜூன் 21, 2024 17:31

கள்ளச்சாராய சாவுக்கு முழுக்காரணம் திறனற்ற திமுக தலைமையிலான மனநல குன்றிய விடியாத ஆட்சீயே . கள்ளச்சாராயத்தை பற்றி இப்போதுதான் மொதல்வரின் கவனத்திற்கு வந்ததென்பது ஆசுகர் அவார்டுக்குரிய நாடகம் . ஒரு நேர்மையான எஸ்பியே விருப்ப ஓய்வில் செல்கிறாரென்றால் இந்த திராவிட மாடலின் ஆட்சியின் லச்சணம் பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளனும் . ஓசியும் இலவசங்களும் வாங்கி கொண்டு கையாளாகத தற்குறிகளுக்கு வாக்களித்து கள்ளச்சாராய சாவுக்கு காரணமாகிவிட்டோம்


Bala
ஜூன் 21, 2024 16:41

இவர்களே வெளியேற்றுவார்களாம். இவர்களே அனுமதியுங்கள் என்று கூறுவார்களாம். நல்ல செட்டப் நாடகம்.


Shanmugam
ஜூன் 21, 2024 15:33

Romba nallavan neeyi...


தமிழன்
ஜூன் 21, 2024 14:59

இன்னுமா முதல்வர் பதவியில் இருக்கிறார்.. வெளியேற்ற பட வேண்டியவர் தமிழக முதல்வர் தான்.. முதல்வர் பதவி விலக வேண்டும்.


bal
ஜூன் 21, 2024 12:59

எல்லாரும் ஒரே குட்டையில் ஓரின மட்டைகள்..ஏன் இவர் சொல்லாமலே சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.


சிவகுமார்
ஜூன் 21, 2024 12:47

உங்க ஆட்சியிலும் நடந்திருக்கிறது. ஆகவே எங்களது நடந்தது குறித்து நீங்கள் கேள்வி எழுப்புவது முறையல்ல. ஐயா, உங்கள் சகோதரி தமிழகப் பெண்களிடம் கடந்த சட்ட சபை தேர்தல் சமயத்தில் மது விலக்கு, ஒழிப்பு குறித்து கொடுத்த வாக்குறுதி (முதல் கையெழுத்து இன்ன பிற உத்தரவாதம்) எல்லாம் வெறும் நடிப்பா? இலவசங்களைக் கொடுத்து தமிழக மக்களையும், உடன் பிறப்பையும் ஏமாற்றுவதே "அண்ணன் வாரார் விடியல் தாரார்" , "நாற்பதும் நமதே" punch dialogs. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்


Kumar Kumzi
ஜூன் 21, 2024 12:27

பங்காளிகள் சண்டை


Balamurugan
ஜூன் 21, 2024 12:24

என்ன நடிப்பு சாமி.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை