உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி பெண் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை; ஆபீசில் வைத்துப் பூட்டிய உதவியாளர் எஸ்கேப்!

கள்ளக்குறிச்சி பெண் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை; ஆபீசில் வைத்துப் பூட்டிய உதவியாளர் எஸ்கேப்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வடக்கனேந்தல் கிராமத்தில் வி.ஏ.ஓ., தமிழரசியை அலுவலகத்தில் வைத்து, நேற்று (டிச.,16) பூட்டு போட்டு பூட்டி விட்டுச்சென்றார் கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா. இது குறித்து வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பகீர் கிளப்பி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனேந்தல் கிராமத்தில், தமிழரசி என்பவர் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார். இதே அலுவலகத்தில், கிராம நிர்வாக உதவியாளராக சங்கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.,16) வி.ஏ.ஓ., தமிழரசியை அலுவலகத்தில் வைத்து பூட்டு போட்டு பூட்டி விட்டு கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா சென்றுவிட்டார். 'கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வேன்' என்று தமிழரசி தெரிவித்து உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h59i144q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமின்றி, கதவை பூட்ட வேண்டாம் என தமிழரசி சத்தம் போட்டு கூப்பிட்டும், சங்கீதா துளி அளவு கூட மதிக்காமல், பைல்களை எடுத்து கொண்டு பைக்கில் சென்று விட்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக வி.ஏ.ஓ., தமிழரசி தெரிவித்தார்.அரை மணி நேரம் கழித்து பூட்டை சங்கீதா திறந்துவிட்டார்.ஏற்கனவே, வி.ஏ.ஓ., தமிழரசிக்கு, சங்கீதாவுக்கு மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக நடந்து வந்துள்ளது. சங்கீதா மீது வி.ஏ.ஓ., தமிழரசி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தமிழ்வேள்
டிச 17, 2024 22:19

திராவிட மாடல் ஆட்சியில் ஒரே கீப்பருக்காக நடந்த தகராறு ஆகக்கூட இருக்கலாம் யார் கண்டது? கட்டுமர பேரறிஞர் சிறியார் மாநிலம்.. அப்படித்தான் இருக்கும்..


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 21:03

சங்கீதா மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிகள் இன்று தமிழரசிக்கு நடந்தவற்றுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் , இன்று பூட்டி செல்லும் சங்கீதா நாளை கொலை செய்யும் அளவிற்கு சென்றால் என்னாகும் ?


sankaranarayanan
டிச 17, 2024 18:41

சபாஷ் சரியான போட்டி!தொடரட்டும் தமிழகத்தில் இதுபோன்றே எல்லா வி.ஏ.ஓ. அலுவலங்களில் இனி ஆளுக்கு ஒரு பூட்டும் சாவியுமாக அனுமதித்தால் இதற்கு விடை கிடைக்கும்


Karthik
டிச 17, 2024 17:40

பணம் பத்தும் செய்யும்...இது என்ன ஜுஜூபி


Anand
டிச 17, 2024 15:04

"கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஆகாது" என நம் முன்னோர்கள் பழமொழி நியாபத்திற்கு வருகிறது.


பாலா
டிச 17, 2024 14:13

திராவிடியன்களின் மாதிரியின் ஒரு கூறு


chennai sivakumar
டிச 17, 2024 13:28

சந்தேகமே இல்லாமல் கட்டிங் தகராருதான்


aaruthirumalai
டிச 17, 2024 13:05

நேர்மைக்காக சண்ட இருக்காது.


HoneyBee
டிச 17, 2024 12:35

இருக்காது ஒருத்தனை பிரிப்பதில் தகராறு


lana
டிச 17, 2024 12:33

பங்கு பிரித்துக் கொள்வது தகராறு ஏற்பட்டு இருக்கலாம். இப்போது எல்லாம் ஆண்கள் ஐ விட பெண்கள் தான் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள்


புதிய வீடியோ