உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி எண்ணிக்கையில் குழம்பிய கமல்; இணையத்தில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

தொகுதி எண்ணிக்கையில் குழம்பிய கமல்; இணையத்தில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

சென்னை: லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை 543 ஆக இருக்கும் நிலையில், இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு கமல் அளித்த பேட்டியில், இந்த எண்ணிக்கையை 453 என மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். இந்த வீடியோவை வைத்து கமலை, நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.லோக்சபாவில் மொத்தம் 543 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை தொகுதி மறுசீரமைப்பு மூலம் மாற்றியமைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க., கம்யூ., வி.சி., பா.ம.க., காங்., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ம.நீ.ம., சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவு செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hs4bhfpe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களை சந்தித்த கமல் அளித்த பேட்டியில் கூறியதாவது: 453 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்பது எனது கருத்து. மக்கள் தொகை 145 கோடியாக இருந்தாலும், இந்த 453 எம்.பி.,க்களே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.அந்த எண்ணிக்கையே போதுமானது. இந்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரித்தால், மத்திய அரசு எடுக்கும் அனைத்து அரசு முடிவுகளும், மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. எதையாவது அதிகரிக்க வேண்டும் என விரும்பினால், மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார். 453 என அவர் திரும்ப திரும்ப இரண்டு முறை கூறினார்.இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கமலை கிண்டல் செய்தும், வசைபாடியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவருக்கு எத்தனை தொகுதிகள் இருக்கிறது என தெரியுமா… இதை தெரியாமல் அவர் அரசியல்வாதியா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

krishnan
மார் 09, 2025 18:52

யாராவது எழுதி கொடுத்தால் கமல் சூப்பரா பேசுவாரு. தானே யோசித்தால் டயோரியா ...வாய் வழி


C G MAGESH
மார் 06, 2025 12:05

அடுத்த உளறல் திலகம்


Ramaswamy Jayaraman
மார் 06, 2025 12:02

கமலஹாசன் சொல்வதையெல்லாம் எந்தவிதத்திலும் எடுத்துகொள்ளக்கூடாது. இவர் ஒரு நடிகர். ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர், இன்னொரு படத்தில் கதாநாயகர், மற்றும் வில்லன் என பலவேஷங்கள் போடுபவர். இன்று நகைச்சுவை நடிகர் அவ்வளவுதான்.


angbu ganesh
மார் 06, 2025 10:24

என்னங்க ஒரு நம்புர் தான் மாற்றி சொன்னார் அதுக்கு போய்


K RAGHAVAN
மார் 06, 2025 09:03

HE DIDNOT KNOW HOW MANY ....


kulandai kannan
மார் 06, 2025 08:40

பெரியார் தனக்கு அறிவிலிகள்தான் வேண்டும் என்றார்.


B MAADHAVAN
மார் 06, 2025 07:39

அவருக்கு மக்களை கணக்கு பண்ண தெரியும். ஆனால், மக்களின் எம்பி தொகை எவ்வளவு என்று கணக்கு பண்ண தெரியாது. தமிழகத்தை ஆள வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால், நாட்டு நடப்பு தெரியாத இந்த ஆள் எப்படி தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ என்று தெரிய வில்லை. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப் படலாமா....


naranam
மார் 06, 2025 06:48

இவன் வேற லெவல் உளறல்! கூத்துல கோமாளி மாதிரி!


PARTHASARATHI J S
மார் 06, 2025 06:46

மக்களுக்கு கழுவி ஊத்த இந்த வார நிகழ்வு. அப்பப்ப இந்த மாதிரி நிகழ்வுகள் மனஅழுத்தத்தை குறைக்கின்றது. வாழ்க கமல். அடுத்த முறை நன்றாக ஹோம்ஒர்க் செய்து விட்டு மீட்டிங் வரவும். ஒத்திகைக்கு தங்கட்கு சொல்லியா தரனும். take 2 shoot 453.


orange தமிழன்
மார் 06, 2025 06:11

நான் தீவிர கமலின் சினிமா ரசிகன்.....ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாடு மிகவும் கேலி கூத்தாக இருக்கிறது....அதற்கு மேலே அவரின் பகுத்தறிவு என்ற பெயரில் கோமலிதனமான பேச்சுகள் அவரிடமிருந்து எங்களை போன்ற பெரும்பாலானவர்கள் சினிமா ரசிகளர்களாகவே மட்டும் இருக்கிறோம்.....இப்ப வரை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை