உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!

போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில் போராடி வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ggm67l5s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முறையான ஊதிய உயர்வு, 8 மணிநேரம் வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.போராட்டம் தொடர்ந்த நிலையில், அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடத்தி தீர்வு காணும்படி அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தொழில் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது.இதில் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அதை பொருட்படுத்தாத சி.ஐ.டி.யு., சங்கத்தினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த அரசு நிர்வாகம், நேற்று இரவோடு இரவாக போராட்ட இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலை போலீசார் மூலம் அகற்றியது. தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்தனர்.இந்நிலையில் இன்று போராட்ட களத்துக்கு வந்த தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு வந்த போலீசார், 'இப்படி கூடுவது சட்டவிரோதம், கலைந்து செல்லுங்கள்' என்று கூறினர். அதை ஏற்காமல் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்ததால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் தொழிலாளர்கள் மணிமாறன், தயாநிதி என்ற இருவர் போராட்ட களத்திலேயே மயங்கினர். சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்ட களத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தடையில்லை

இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தாக கூறி சி.ஐ.டி.யு., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொண்ரவு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் பாலாஜி மற்றும் அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது, தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்கவில்லை என போலீசார் விளக்கமளித்தனர். இதனையடுத்து சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என நீதிபதிகள் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

தலைவர்கள் சந்திப்பு

கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

15 நாள் காவல்

இதனிடையே, போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக எல்லன் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

jayvee
அக் 09, 2024 19:58

இதே தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும் ருபாய் 200 மற்றும் ஒரு குவார்ட்டர் வாங்கிக்கொண்டு திமுகவிற்கு வாக்களிப்பார்கள் .. 2026 மீண்டும் உதயநிதி முதல்வர்.. அதிகாரிகள் உண்மையான முதல்வர்கள்


Jagan (Proud Sangi)
அக் 09, 2024 19:40

காற்று/தண்ணீர் அந்த ஆலையால் மோசம் என்று ஸ்டெர்லிட் ஆலையை சீனன் தொழிற்சங்க கைக்கூலிகள் மூலம் மூட வைத்தான். இப்பவும் காற்று /தண்ணீர் அதே நிலை தான். இந்தியாவின் 37 சதவிகித தாமிரம் அங்கே உற்பத்தியானது. சீனன் காசு குடுத்து செய்தி பரப்பி, போராட்ட காரர்களுக்கு காசு குடுத்து மூட வச்சான் இப்போ இந்தியா தாமிரம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆம்பூர் தோல் பதனிடும் மற்றும் திருப்பூர் சாயப்பட்டறைகள் இல்லாத மாசு , யூரோ 4 மாசுக்கட்டுப்பாடு மற்றும் "zero disge" பின்பற்றும் ஸ்டெர்லிட் ஆலையால் வந்தது என்பது பிதற்றல். இப்போ சிப் மற்றும் மைக்ரோ பிரஸ்ஸர் தயாரிப்பில் போட்டி கூடாது என்பதால் தடுக்கிறான் சீனன் நம் கம்ம்யூனிஸ்ட் கைக்கூலிகளை வைத்து


Jagan (Proud Sangi)
அக் 09, 2024 19:28

என்னை விட்டால் வேறு இடம் கிடையாது என்று சீனா செய்தி அனுப்புகிறது ? இந்தியாவில் எதுவுமே தயாரிக்க முடியாது இந்த சீன கட்டுப்பாட்டில் உள்ள CITU உள்ளவரை. முதலில் தடை செய்யப்பட வேண்டியது இந்த சீனனிடம் காசு வாங்கி தொழிற்சாலைகளை மூடும் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் கூட்டங்களை.


Kannan Chandran
அக் 09, 2024 17:18

பல நுறு ஒப்பந்தங்கள் மற்றும் பல்லாயிரம் கோடி முதலீட்டிற்கு பின்னர் இயங்கும் ஒரு தொழிற்சாலையை இரண்டு சிவப்பு துண்டுகளால் தடைபடுவது வேதனை..


தமிழ்வேள்
அக் 09, 2024 15:39

கம்யூனிஸ்டுகளின் குதத்தில் இரும்பு கம்பிகள் , வலுவான போலீஸ் லாட்டிகளை விட்டு குடைந்து சுழற்றினால் , தொழிற்சங்கம், யூனியன் , ஸ்ட்ரைக் என எதுவும் இருக்காது ....செங்கொடி டோலர்களை நடுத்தெருவில் நாயை அடிப்பதுபோல அடித்து பெண்டாட்டி பிள்ளை பார்க்க கதற வைத்தால் , இந்த யூனியன் பிழைப்புக்கு வரமாட்டான் .....


kalyanasundaram
அக் 09, 2024 15:20

This factory will shift to Andhra very shortly. Most will loose jobs.


மொட்டை தாசன்...
அக் 09, 2024 15:07

கேரளாவையும் மேற்கு வங்காளத்தையும் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே . தொழிற்சாலை மூடிவிட்டால் தொழிலார்களின் நிலைமை மோசமாகிவிடும் ஆனால் தொழிற்சங்க நிர்வாகிகள் வேறு தொழிற்சாலையில் அவர்களின் கொடிகளை நட்டு பிழைத்துக்கொள்வார்கள் .


பாமரன்
அக் 09, 2024 14:38

கம்யூனிஸ்ட் சங்கங்கள் இந்த மாதிரி தொழிற்சாலைகளில் தொடங்க அனுமதி கிடையாது என்பது ஆலை தொடங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அங்கே வேலைக்கு சேறும் போது அப்பாயிண்ட்மெண்ட் காண்ட்ராக்டிலும் இருக்கும்... இதையும் மீறி சில புல்லுறுவிகளை வச்சி கம்யூனிஸ்ட் பழம் பெருச்சாளிகள் செய்யும் வேலை இது. மேலே வளரவிடாமல் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கனும். சாம்சங் மாதிரி நிறுவனங்கள் என்றும் ஊழியர்கள் நலனில் குறை வைக்க வாய்ப்பில்லை... ஒழுங்கா வேலைக்கு திரும்பலன்னா கம்பெனி மூடிடுவானுவ... கம்யூனிஸ்ட் கூட சேர்ந்து உண்டி வசூல் பண்ணனும்... பார்த்து நடந்துக்கங்க மக்கா...


Palanisamy Sekar
அக் 09, 2024 14:06

ஐயோ சி ஐ டி யூ சவுந்திரராஜன் தலைமையில் என்றால் அந்த நிறுவனம் வேறு வழியில்லாமல் வேறு மாநிலத்திற்கு சென்றுவிடும் என்பது சாத்தியமான உண்மை.


சாண்டில்யன்
அக் 09, 2024 15:55

நான் சொல்லாமல் தவிர்த்ததை பட்ட வர்த்தனமாக இங்கே பலரும் சொல்கிறார்கள். இந்த "சகுனி சௌந்தர்ராஜன்" கால் வைத்த இடம் ஆமை புகுந்த வீடு ஆகும். பின்னணியில் யாரிருப்பார்கள் என்பது இந்த மாநில மக்களுக்கு நன்றாகவே தெரியும். சாம்சங் தொழிலாளர்கள் புத்தியாய் பிழைத்துக் கொள்ள வேண்டும். இந்நேரம் அடிவருடிகள் அவர்கள் பிள்ளைகள் உறவினர்கள் என்று எத்தனை பேர் சத்தமில்லாமல் வேலையில் சேர்ந்து விட்டார்களோ ஸ்ட்ரைக்ன்னா அதெல்லாம் சகஜம்ப்பா


ArGu
அக் 09, 2024 13:46

உருப்பட விடமாட்டான் உண்டிக்குலுக்கி புத்தி இருந்தா பொழச்சிக்கோ இல்லனா நாசமா போ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை