உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி காரியாபட்டி சிறுவன் சாதனை

கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி காரியாபட்டி சிறுவன் சாதனை

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பி.புதுப்பட்டி சிவ விஷ்ணு 5, கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்ததுடன் 3வது சாதனையாளர் இடத்தை பிடித்தார். காரியாபட்டி பி.புதுப்பட்டி சிவவிஷ்ணு 5, காங்கேயம் பாரி 7, அமர்நாத் 40, இன்பா 10, கோவை மனுசக்கரவர்த்தி 12, சென்னை மகேஷ்வரி 25, கடலுார் சக்தி வேல் 32 ஆகியோர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் முத்தமிழ் செல்வி தலைமையில் ஆப்பிரிக்க கண்டத்தின் தான்சானியாவில் உள்ள மிக உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தில் அக்.30ல் ஏறத் துவங்கி நவ.5ல் 5 ஆயிரத்து 895 மீட்டர் ஏறி சிகரத்தை தொட்டனர். இவர்களுடன் சென்ற சென்னை தாம்பரம் ரேஷன் சிம்ஹா 13, தந்தை பாபு உடன் 4 ஆயிரத்து 720 மீட்டர் உயரம் வரை சென்றார். சிவவிஷ்ணு உலகத்தில் முதன் முதலாக 5 வயதில் கிளி மஞ்சாரோ சிகரம் ஏறிய 3வது சாதனையாளர் இடத்தை பிடித்தார். முத்தமிழ் செல்வி சிறு வனின் பெரியம்மா ஆவார். அவர் காரியாபட்டி ஜோகில்பட்டியை சேர்ந்தவர். காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சிகரம் ஏறி சாதனை படைத்திருப்பது அப்பகுதி மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மணிமுருகன்
நவ 10, 2025 00:12

அருமை வாழ்த்துக்கள்


Anbarasu K
நவ 09, 2025 10:18

சிறு வயதில் வைராக்கிய சாதனை


Premanathan S
நவ 09, 2025 09:46

பாராட்டுக்கள்


நிக்கோல்தாம்சன்
நவ 09, 2025 07:33

பொடியா வாழ்த்துக்கள், மேலும் மேலும் பல அரிய சாதனைகளை செய்ய இயற்க்கை உனக்கு அருளட்டும்


Vasan
நவ 09, 2025 06:00

வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி