உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்த்திகை தீபத் திருவிழா: அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

கார்த்திகை தீபத் திருவிழா: அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி காளியம்மன் கோவில், கருப்பணசாமி கோவில் முன் கார்த்திகை தீபத் திருவிழா நடத்த அனுமதித்த, ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் உள்ள கருப்பணசாமி கோவிலை மீண்டும் திறக்க வேண்டும். தினசரி பூஜைகளை நடத்த மக்களை அனுமதிக்க வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழா நடத்த அனுமதி வழங்க ஆத்துார் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை டிச.2 ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:ஹிந்து, கிறிஸ்தவர்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கிராமத்தில் பெரும்பான்மை சமூகமான கிறிஸ்தவர்களுக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணிற்குட்பட்ட நிலத்தில் எந்த உரிமையும் இல்லை. மனுவில் குறிப்பிட்டுள்ள இடங்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். இதை எதிர்த்து திண்டுக்கல் ஆர். டி. ஓ. மற்றும் பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்த சபரிமுத்து தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வு முன் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M.Sam
டிச 19, 2025 16:27

தடை போடவேண்டிய தீர்ப்புதான் சாங்கி நீதிபதி ஈதியாய் காற்றில் பராஜ்ஜை விட்டார் அந்த சாமிநாதனுகஏ தெய்ரயும்


M S RAGHUNATHAN
டிச 19, 2025 15:48

பட்டா நிலத்தில், சொந்த இடத்தில் தீபம் ஏற்ற தடை இன்று விதித்த நீதிபதிகள் அமர்வு நாளை வீட்டுக்குள்ளும் தீபம்.ஏற்றக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள். இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். பூர்ண சந்திரனுக்கு வீர வணக்கம்.


KULAMAARI
டிச 19, 2025 16:50

நீங்களும் தீக்குளித்து இறக்க லாமே


M S RAGHUNATHAN
டிச 19, 2025 15:45

தீபம்.ஏற்றலாம் என்று சொன்ன நீதிபதியின்.பெயரை குறிப்பிட்டு சொல்லிய நிருபர், அதற்கு தடை விதிக்க அமர்வு நீதிபதிகள் பெயரை ஏன் குறிப்பிடவில்லை ,?


M S RAGHUNATHAN
டிச 19, 2025 15:43

இது தான் ஆரம்பம். இனி வரும் நாட்களில் ஹிந்துக்கள் வீட்டு வாசல் முன் கோலங்கள் போடத் தடை என்று நீதி மன்றம் சொல்லும். ஹிந்துக்கள் தங்கள் மதக் குறியீடுகளை வைக்க திலகம், குங்குமம், திருநீறு, திருமண் , தாலி, பூக்கள் வைத்துக் கொள்வது என்று அனைத்திற்கும் தடை கேட்டு சிறுபான்மையினர் நீதி மன்றம் சென்று தடை வாங்குவார்கள்.


சமீபத்திய செய்தி