உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜருக்கு நிறைய செய்தவர் கருணாநிதி: அமைச்சர் பெரியசாமி

காமராஜருக்கு நிறைய செய்தவர் கருணாநிதி: அமைச்சர் பெரியசாமி

தமிழக அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:

காமராஜர் குடியாத்தம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டபோது, தி.மு.க., போட்டியிடவில்லை. 'பச்சைத்தமிழர் வெற்றி பெற வேண்டும்; முதல்வராக இருக்க வேண்டும்' என, மறைந்த முதல்வர் அண்ணாதுரை கூறினார். காமராஜர் இறந்த பின், அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர் கருணாநிதி.மகன் கூட தந்தைக்கு இவ்வளவு செய்திருக்க மாட்டார். ஆனால், காமராஜர் மேல் இருந்த பற்றால், அவரை போற்றும் வகையில் கருணாநிதி நிறைய செய்திருக்கிறார்.அதையெல்லாம் மறைக்க முடியாது. காமராஜர் பிறந்த நாளை கல்வி நாளாக அறிவித்து, அரசு சார்பில் விழா எடுக்கிறோம். அவருடைய புகழை போற்றும் ஒரே இயக்கம் தி.மு.க.,வும், ஸ்டாலினும் தான்.சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால், உண்மையாகி விடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Selva
ஜூலை 19, 2025 23:01

ஒரு அரசு ஆசிரியர் வேலைக்கு 30-40 லட்சம் வாங்கும் திராவிட மாடல் அமைச்சர்களுக்கு காமராஜர் பெயரைச் சொல்லவே அருகதை கிடையாது.


RAJASEKAR
ஜூலை 19, 2025 22:10

பொய்யிலே பிறந்து வளர்ந்து கட்சியின் தொண்டர். எப்படி இருப்பார்.


ஆரூர் ரங்
ஜூலை 19, 2025 12:13

செஞ்ச ஒரே உதவி மெரினா கடற்கரையில் அண்ணாதுரைக்கு அருகில் அடக்கம் செய்ய விடாததுதான். காமராஜ் அதிர்ஷ்டக்காரர். மீறி புதைத்திருந்தால் கூச்சதால் அவரது ஆவி நெளிந்திருக்கும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 19, 2025 13:18

காமராஜருக்கே தெரியாமல் அவருக்கு உதவி செய்திருக்கிறார் கருணாநிதி .கருணாநிதி செய்த உதவி கருணாநிதிக்கே தெரியாது என்பதுதான் ஆச்சரியம் ,, ..இது பற்றி நெஞ்சுக்கு நீதியிலும் கருணாநிதி எழுதவில்லை .. ஆனால் திருச்சி சிவா கண்டுபிடித்து சொல்லிவிட்டார் .. அமைச்சர் பெரியசாமியும் கண்டுபிடித்து விட்டார் .வாழ்நாளின் ஆறாண்டுகள் சிறையில் கழித்த காமராஜருக்கு சிறையில் ஏ சி இருந்ததா? .. பிரிட்டிஷ் காரர்களிடம் சொல்லி கருணாநிதி சிறையில் ஏ சி வசதி செய்து கொடுத்தாரா? கருணாநிதி .உருட்டுன்னா இது உருட்டு .. சர்வதேச தரம் வாய்ந்த சுத்தமான உருட்டு ..


M Ramachandran
ஜூலை 19, 2025 11:52

பெரியா சாமி சின்ன புத்தி. தத்திக்கு பயந்து உளர்களை வெளி படுத்துகிறார்கள்


M Ramachandran
ஜூலை 19, 2025 11:47

பாவிகள் வாய் புழுத்து போகும். காமராஜரை தன்னைய்ய போனால் நினைத்து கூத்தி வைத்து கொண்டிருக்கிறார் ஐதராபாத்தில்பங்களா வைத்திருக்கிறார் என்று கூறிய கயவன் யார்? ஆனால் காமராஜரோ எதிர் கட்சியினர் அப்படிதான் பேசுவார்கள்யென்று அதைய்ய பெரிது படுத்தாமல் சென்றார்.மதிய உணவு திட்டமென காமராஜர் கொண்டு வந்து புனையய சுருட்டு பேர்வழி அண்ணாதுரையால் நிறுத்த பட்டு பிறகு MGR ஆல் மறுபடியும் தொடஙக பட்டது.


Yes your honor
ஜூலை 19, 2025 11:27

ஆமாம் ஆமாம், காமராஜர் நல்லவர் என்ற ஒரே காரணத்தினாலோ என்னவோ 1966-67 ல் திமுக காமராஜரை வச்சு செய்தது. அதைத்தான் ஒருவேளை இவர் குறிப்பிடுகிறார் போலும்.


மக்கள் குரல்
ஜூலை 19, 2025 11:07

பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால், உண்மையாகி விடாது திரு. பெரியசாமி அவர்களே. எதாவது சொல்லணும் என்று சொல்லுவீர்களோ. மகன்போல செய்தாராம் கருணாநிதி அவருக்கு மெரினாவில் இடம்தர மறுத்ததே உங்கள் கருணாநிதிதான் என்பது மக்கள் நன்கு அறிவர். இப்போதுஉள்ள சந்ததியருக்கு வேண்டுமென்றால் ஒன்றும் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அப்போதுஉள்ள சந்ததியருக்கு நீங்கள் செய்த ஊழல் மற்றும் பொய், புரட்டு எல்லாம் நன்கு அறிவர். ஊழல் காரணமாக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட ஒரே கட்சி என்ற பெருமை பெற்றவர்கள் தானே நீங்கள். காமராஜ் அவர்கள் பெயர்க்கு மேலும் கலங்கம் ஏற்படுத்தாமல் உங்கள் மனசாட்சிப்படி அவரிடம் மன்னிப்புகேளுங்கள். இல்லை என்றால் அவரின் ஆன்ம உங்களை மன்னிக்காது. மேலும் மக்கள் உங்களை மன்னிக்கவும் நம்பவும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.


Madras Madra
ஜூலை 19, 2025 11:03

தமிழ் நாட்டுக்கு அளப்பரிய சேவையை தன நிகர் இல்லாத ஆட்சியின் மூலம் செய்தவர் பெரும் தலைவர் அவர் சூரியன் போன்றவர் அவரால் பயன் அடைந்தது தமிழகம் சிறப்ப்பான அடிப்படை கட்டுமானத்தை நாட்டுக்கு தன் நல்ல ஆட்சியால் தந்தவர் அந்த அடிப்படையை பயன்படுத்தி கொள்ளை மட்டுமே அடித்தது திமுக அவர் வேண்டி இருந்தால் இந்தியா முழுவதிலும் இருந்து அவருக்கு கொட்டி கொடுக்க பல காங்கிரஸ் செல்வந்தர்கள் இருந்தார்கள் இவர் அரசியல் துறவி இவருக்கு எந்த தேவையும் இல்லை என்பதே ஊர் அறிந்த உண்மை எச்சையை நக்கி பிழைப்பவர்களுக்கு தூய மனிதர்களை அவதூறு சொல்லி தங்களை போலத்தான் அவரும் என்று நிலை நிறுத்த இப்படி வாந்தி எடுப்பர் கருணாநிதி காமராஜருக்கு நிறைய செய்தார் என்பது திமுக வினரின் கொடூர ஈன புத்தியையே காட்டுகிறது இவர்களுக்கு வேறு நேர்மறை அரசியல் செய்ய தெரியாது என்பதே உண்மை.


S. Rajan
ஜூலை 19, 2025 10:49

காமராஜருக்கு ஊரெங்கும் வீடுகள் யுண்டு. அரிசி பஞ்சம் வந்தது காங்கிரெஸ்னால் என்று திட்டி சாமான்யமானவர்களை முட்டாள்களாக்கி பதவிக்கு வந்தவர் கருணாநிதி. தி மு க காரனுக்கு போய் சொல்வதில் மன உறுத்தல் எப்போதும் இருந்ததில்லை. .


ponssasi
ஜூலை 19, 2025 10:49

பெத்த மகனுக்கே ஒன்றும் செய்யாதவர் கருணாநிதி. மனம் வெதும்பியே இன்று அவரின் மூத்த மகன் முத்து காலமானார். காமராசருக்கு மணிமண்டபம் கட்ட இடம் கொடுத்தாராம், என்ன அடையாறில் வாங்கி கொடுத்தாரா? அரசு கோப்பில் கையெழுத்திட்டார் அவ்வளவே, இது அவர் கடமை இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது. இதை சொல்வதே அவமானம். முதல்வராக மறைந்தாள் தான் மெரினாவில் இடம் என காமராஜரை நிராகரித்தார் கருணாநிதி, மக்களும் கருணாநிதி மறையும்போது முதல்வராக இருக்க அனுமதிக்கவில்லை ஆனால் ஸ்டாலின் எடப்பாடி காலில் விழுந்து வழக்குகளை வாபஸ் பெறவைத்து முன்னாள் முதல்வரை அடக்கம் செய்தார்.