உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி குடும்ப வாரிசுகளுக்கு மட்டுமே தி.மு.க.,வில் தலைவர் பதவி: இ.பி.எஸ்., பாய்ச்சல்

கருணாநிதி குடும்ப வாரிசுகளுக்கு மட்டுமே தி.மு.க.,வில் தலைவர் பதவி: இ.பி.எஸ்., பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: 'தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் தான், கட்சிக்கு தலைவராக வர முடியும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் கடுமையாக சாடியுள்ளார்.சேலம், வனவாசியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: நான் கனவு காணவில்லை, ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்; அது பலிக்காது. ஒவ்வொரு முறையும் தேசியக்கட்சியை ஆதரிக்கிறோம்; அவர்கள் பதவிக்கு வந்தவுடன் ஏறிய ஏணியை எட்டி உதைப்பதைப் போல், கூட்டணிக் கட்சிகளைப் பொருட்படுத்துவதில்லை. ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று தான் அவர் மத்தியில் கூட்டணி அமைக்கிறார்.

வாரிசு அரசியல்

கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் முதல்வர் ஆனார். உதயநிதி தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார். தி.மு.க., குடும்ப கட்சி. வாரிசு அரசியல். மன்னர் பரம்பரையில் தான், அரசனுக்கு பிறகு இளவரசர் வருவார். இந்த நிலைமை தி.மு.க.,வில் இருந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் தான், கட்சிக்கு தலைவராக வர முடியும்.

பதவி உண்டு

அ.தி.மு.க.,வில் அப்படி இல்லை. யார் கட்சிக்கு உழைக்கிறார்களோ, நேர்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒருநாள் ஏதாவது பதவி நிச்சயமாக கிடைக்கும். தி.மு.க.,வுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போல் மாய தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு சரிவும், அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு எந்த சரியும் இல்லை. லோக்சபா தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. பெரிய அளவில் கூட்டணி இல்லாமலே, அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M Ramachandran
அக் 23, 2024 20:24

யேன் இந்த ஆதங்கம். முயன்று தோல்வி அடைய்ந்து விட்டீர்களா?


carma
அக் 24, 2024 06:18

Idiot like you accept to be slavery then yes your logic is correct


raja
அக் 23, 2024 19:09

கழகம் தான் குடும்பம் ... குடும்பம் தான் கழகம் என்று கட்டுமரம் எப்போவோ சொல்லிட்டு மெரினா கடற்கரையில் வடை படையலுடன் துயில்கிறது... பாவம் என் உடன் பிறப்புகள் திராவிட ஒன்கொள் கொள்ளையன் விடியலிடம் ஏமாந்த தமிழர்களும் தங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று தளபதி விடியல் வால்கே மகன் சின்னவன் வால்கே என்று ருவா 200 க்காக கொத்தடிமையாய் கூவிகிட்டு இருக்குதுவோ...


sundarsvpr
அக் 23, 2024 17:24

குடும்ப வாரிசு அரசியலில் நிரந்தரம் இல்லை. வியக்கும் அளவு மாறுதல் நடக்கலாம். இந்த மாற்றம் தமிழகத்தில் தொடங்காது என்று சொல்வதற்கு இல்லை.


வைகுண்டேஸ்வரன்
அக் 23, 2024 14:20

அங்கே உங்க கட்சி MLA வைத்திலிங்கம் மீது ED பாய்ந்து பிராண்டுது, அது பற்றி ஏதாச்சும் பேசுங்க பாக்கலாம்??


வைகுண்டேஸ்வரன்
அக் 23, 2024 14:17

அவிங்க கட்சியில் யாரு தலைவர் ஆனா உங்களுக்கென்ன? நீங்கள் திமுக வா? இல்லை தானே? அப்புறம் என்ன? MGR க்கோ அல்லது ஜெயலலிதா வுக்கோ ஒரு வாரிசு இருந்திருந்தால், இன்னிக்கு அதிமுக இப்படி நாலு தூண்டுகளாக, ஜாதிக் கட்சியாக மாறியிருக்குமா? எந்த தலைமைப் பண்பும், ஆளுமையும் இல்லாத உங்களிடம் மாட்டிக்கிட்டு அதிமுக இப்படி சின்னபின்னமாகி இருக்காது.


Mettai* Tamil
அக் 23, 2024 15:12

பழக்க தோஷம் , வாரிசு அரசியலை நியாய படுத்துறீங்க .....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:20

ஜனநாயக குடியரசில் எந்தக்கட்சியும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதன்று ...... ஹிந்து பெயரில் எழுதும் இஸ்லாமியராக இருப்பதால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை ....


Nallavan
அக் 23, 2024 14:01

ஓ பி எஸ் க்கு ஒரு பதவி கொடுத்து பாத்த என்ன? அவர் உன் வாரிசு இல்லை அல்லவே


சம்பா
அக் 23, 2024 14:01

அது அவனுக உள்கட்சி பிரச்சன நமக்கு தேவை இல்லாதது அவனுக எக்கேடு கெட்டாலென்ன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை