உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவம்:பொறுப்பு டிஜிபி விளக்கம்

கரூர் சம்பவம்:பொறுப்பு டிஜிபி விளக்கம்

சென்னை: கரூரில் நடந்த விஜய் பரப்புரையில் அதிகமானோர் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துவிட்டது என்று டிஜிபி(பொறுப்பு)வெங்கட்ராமன் கூறினார்.டிஜிபி(பொறுப்பு)வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:2000 போலீசார்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று விஜயே பாராட்டினார். 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறிய நிலையில், 27 ஆயிரம் பேர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. முதலில் லைட்ஹவுஸ் ரவுண்டானா, உழவர்சந்தை ஆகிய இடங்களில் அனுமதி கேட்டிருந்தனர். அந்த இடம் குறுகிய இடமாக இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு வேலுச்சாமிபுரத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதே இடத்தில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இபிஎஸ் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.உயிரிழந்த 39 பேரில் சிறுமியர்கள் 5 பே ரும், சிறுவர்கள் 5 பேரும் , 17 பெண்கள், 12 ஆண்களும் அடங்குவர். இவர்களில் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்லை சேர்ந்தவர் தலா ஒருவர் உயிரிழந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை