உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வருக்கு அழைப்பு

விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வருக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் :ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் விநாயகர் சதுர்த்திக்கு, ஹிந்து முன்னணி சார்பில், 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகள் முன், ஒன்றரை அடி, இரண்டடி என, 15 லட்சம் சிலைகளை வைத்து கொண்டாட உள்ளனர்.திருப்பூரில், நான்காம் நாளும், கோவையில், ஐந்தாம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறோம். இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் கொடுத்துள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில், 1,500 இடங்களில், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடுகிறோம். அந் நிகழ்வில் மத்திய அமைச்சர் முருகன் பங்கேற்கிறார்.ஆங்காங்கே சில இடங்களில் போலீசார் மூலம் சிலை வைக்க நெருக்கடி தரப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இரண்டு நாள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

T.sthivinayagam
செப் 06, 2024 16:21

நல்ல மனசுடன் அழைக்க நினைத்தால் போப்ஆண்டவரையும் தலமை ஹாஜியையும் புத்தமதபிட்ஷகளையும் சீக்கியமத குரு தலைவரையும் ஜனமத தலைவரையும் அழைக்கலாம்


TSRSethu
செப் 06, 2024 14:39

முருகன் மாநாடு நடத்தியதால் வருவாரா என எதிர் பார்க்கிறார். பார்க்கலாம். அவரை அழைப்பதை விட துர்கா அவர்களை அழைக்கலாம்.


HoneyBee
செப் 06, 2024 11:51

எதுக்கு இந்த வீண் வேலை/செலவு. எப்படியும் அங்கு வரப்போவதில்லை.. சிறுபான்மை ஓட்டு விழாது.. ஏன் ஐயா விருப்பம் இல்லாத ஜென்மங்களை வற்புறுத்தி உங்கள்/ நம் தரத்தை தாழ்த்தி கொள்கிறீர்கள். ஜெய் ஹிந்த்... ஜெய் மோடிஜி


T.sthivinayagam
செப் 06, 2024 11:12

விழாவுக்கு வந்தா மட்டும் என்ன அர்ச்சனை ஆராதனை பண்ண விடவாபோகிறிர்கள் அதற்கு வீட்டிலே அரச்சனை ஆராத்தி எடுத்து வழிபட்டுக்களாம் என ஆன்மீக அரசியல் சார்ந்தவர் வேதனை படுகின்றனர்


RAJ
செப் 06, 2024 10:59

ஏன் சார்?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 06, 2024 09:14

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வரலைன்னா ப மு க வுக்கு ஹிந்துக்கள் ஒட்டு கிடைக்காம போயிருமா ????


T.sthivinayagam
செப் 06, 2024 08:57

வேற ஏதுவும தெரியாதா இன்னும் என்தனை நாள்தான் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யிர்கள் என ஆன்மீக அரசியல் சார்யத்வர்கள் கருத்து கூறுகின்றனர்கள்


Durai Kuppusami
செப் 06, 2024 07:44

உங்களுக்கு இது கேவலமாக இல்லையா ஏன் அழைப்பு விடுக்கிரீர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை