உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பசுமை மின்சாரம் எடுத்து செல்லும் கயத்தாறு - தென்னம்பட்டி வழித்தடம்

பசுமை மின்சாரம் எடுத்து செல்லும் கயத்தாறு - தென்னம்பட்டி வழித்தடம்

சென்னை:கயத்தாறு மற்றும் தென்னம்பட்டி, 400 கிலோ வோல்ட் வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், அந்த வழித்தடத்தில் தற்போது, 200 மெகாவாட் பசுமை மின்சாரம் எடுத்து செல்லப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில், மின்வாரியம், 2,780 மெகாவாட் திறனில், மூன்று அனல்மின் நிலையங்களை அமைத்து வருகிறது. அதில், 800 மெகா வாட் திறனுள்ள, 'வட சென்னை - 3'ல் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

இறுதிக்கட்டம்

திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய, பசுமை மின் நிலையங்களை அமைத்து வருகின்றன. அவற்றில் உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை சென்னைக்கு எடுத்து வரவும், திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் அனல் மின்சாரத்தை பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, வடசென்னை மின் நிலைய வளாகம், விழுப்புரம் மாவட்டம் அரியலுார், கோவை, விருதுநகரில் தலா ஒரு துணைமின் நிலையமும், அவற்றை இணைக்க அதே திறனில் மின் வழித்தடங்களும் அமைக்கும் பணி நடக்கிறது. வட சென்னை, அரியலுார் துணைமின் நிலையங்களும், மின் வழித்தடமும் செயல்பாட்டிற்கு இந்தாண்டு துவக்கத்தில் வந்துவிட்டன. இவை, 5,000 மெகாவாட் எடுத்துச் செல்லும் திறன் உடையவை. விருதுநகர் துணை மின் நிலைய கட்டுமானம் இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது. கோவை துணைமின் நிலைய பணி இன்னும் துவங்கவில்லை. இருப்பினும், கோவை - விருதுநகர் இடையில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நடக்கிறது.

சூரியசக்தி

விருதுநகர் துணை மின் நிலையத்திற்கு காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் எடுத்து வருவதற்கு, கயத்தாறு மற்றும் தென்னம்பட்டி துணைமின் நிலையங்களில் இருந்து, 400 கி.வோ., திறனில், 70 கி.மீ., துாரத்திற்கு வழித்தடம் அமைக்கும் பணி, செப்., இறுதியில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த வழித்தடத்தில் தற்போது, 200 மெகா வாட் மின்சாரம் எடுத்து செல்லப்படுகிறது. இதை படிப்படியாக, 400 மெகா வாட்டாக அதிகரிக்க, மின்வாரியம் திட்டமிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை