மேலும் செய்திகள்
'சரஸ் மேளா' விற்பனை கண்காட்சி
28-Dec-2024
சென்னை:மலேஷியாவில் நடத்தப்படும், சர்வதேச வணிக சந்திப்பு கண்காட்சியை ஒட்டி, 'காதி கிராப்ட்' நிறுவனத்தில், புதிய ரக பட்டுப்புடவை உட்பட, ஆறு புதிய தயாரிப்புகளை, அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிமுகம் செய்து, விற்பனையை துவக்கி வைத்தார். உலக தமிழ் வம்சாவளி வர்த்தக சபை சார்பில், மலேஷியாவின் பினாங்கில், நாளையும், நாளை மறுநாளும், 'சர்வதேச வணிக சந்திப்பு கண்காட்சி' மற்றும், 'உலகளாவிய வர்த்தக இணைப்பு மாநாடு' நடக்கிறது. இதில், உலகின் பல்வேறு நாடுகள் பங்கேற்று, தங்கள் நாட்டின் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன. அதேபோல, தமிழக அரசின், கதர் கிராம தொழில் வாரியம் சார்பில், கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த, கதர் ரகங்கள், பட்டுப் புடவைகள், குளியல் மற்றும் சலவை சோப்பு, தேன், பனை பொருட்கள், பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், தமிழகத்தின் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில், புதிய ரக ஆரணி ஜரிகை கரை பட்டுப் புடவை, பட்டு நுால் புடவைகள், நவீன வடிவிலான அச்சிடப்பட்ட ரெடிமேட் சட்டைகள், ஆப்பிள் கிரீன் கண்ணாடி சோப்பு, தோலினால் ஆன காலணி உள்ளிட்ட ஆறு புதிய தயாரிப்புகளும் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. இவற்றை அமைச்சர் ராஜ கண்ணப்பன், நேற்று முன்தினம் அவரது முகாம் அலுவலகத்தில் அறிமுகம் செய்து, விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் கதர் துறை செயலர் அமுதவல்லி, கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
28-Dec-2024