உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி: கேலோ இந்தியா போட்டி அழைப்பிதழை வழங்குகிறார்

நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி: கேலோ இந்தியா போட்டி அழைப்பிதழை வழங்குகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஜன.,19 முதல் 31 வரை நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்க பிரதமர் மோடியை, அமைச்சர் உதயநிதி நாளை (ஜன.,4) சந்திக்க உள்ளார்.அரசின் திட்டத்தின் கீழ் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. 2021ல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியாணா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலிலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.இந்த ஆண்டு தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, டில்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளார். இன்று (ஜன.,3) இரவு டில்லி செல்லும் உதயநிதி, நாளை பிரதமர் மோடியை சந்தித்து கேலோ இந்தியா போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்க உள்ளார். அதேபோல் மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து அழைப்பிதழை வழங்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Chennaivaasi
ஜன 04, 2024 01:52

பிரதமரின் நேரம் மிகவும் முக்கியமானது. மகத்தானது. அதை இந்த தமிழ்நாட்டு பப்புவுக்காக வீணடிக்கக்கூடாது. பப்பு அவ்வளவு ஒன்றும் விவரமானவர் அல்ல பிரதமரை சந்திக்கிற அளவுக்கு. அழைப்பிதழை கொரியர் அல்லது இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பினாலே போதுமானது.


Anand
ஜன 03, 2024 17:13

கேலோ என்பது ஒரு சுத்தமான தமிழ் வார்த்தை.......


ஆரூர் ரங்
ஜன 03, 2024 16:52

பெயரையே கேலோ பாரத்ன்னு மாத்தி அழைப்பிதழ் குடுக்கணும்.


Mani . V
ஜன 03, 2024 16:04

கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி பெற வாழ்த்துக்கள். திருச்சியில் கொடுத்து இருக்கலாமே? எது மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்ய இந்த பயணம் எல்லாம் தேவையா


SIVAN
ஜன 03, 2024 15:33

"KHELO" என்பது ஹிந்தி வார்த்தை. எப்படி த்ரவிடியாஸ் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒத்துக்கொண்டார்கள். ஆமா ஆமா ஒதுக்கலேன்னா, மோடி என்ன செய்வாரோ என்ற பயம்தான். அந்த பயம் இருக்கணும்.


rsudarsan lic
ஜன 03, 2024 14:41

பழைய சந்திப்பென்றால் எப்போது? எதற்கு?


நாஞ்சில் நாடோடி
ஜன 03, 2024 14:34

டெல்லியில் அடிபணிந்த திராவிட ...


ngopalsami
ஜன 03, 2024 13:47

காக்கா எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கழுகு ஆகாது.


Shekar
ஜன 03, 2024 12:16

என்னது நம்ம சின்னவர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கபோறாரா?.....ஐயோ பிரதமர் இப்பவே நடுநடுங்கிகொண்டு இருப்பாரே, சின்னவர் என்ன கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில்


sridhar
ஜன 03, 2024 11:55

Modiji , please give a break before starting the next dose of attack.


மேலும் செய்திகள்