உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "நோக்கமே வீணாகிவிடும்": வழித்தட வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

"நோக்கமே வீணாகிவிடும்": வழித்தட வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கோயம்பேட்டில் பயணிகளை ஏற்ற ஆம்னி பஸ்கள் உரிமை கோரிய வழக்கில், அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்க செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னைக்குள் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கினால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகிவிடும் என ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜன.,24ல் போக்குவரத்து துறை உத்தரவிட்டது. கோயம்பேட்டில் பயணிகளை ஏற்ற ஆம்னி பஸ்கள் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு, இன்று (பிப்.,07) விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு விளக்கம்

அப்போது தமிழக அரசு தரப்பில், '' ஆம்னி பஸ்கள் கோயம்பேடு பஸ் முனையத்திலிருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும்.பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விட மட்டும் அனுமதி வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

ஐகோர்ட் உத்தரவு

இதையடுத்து, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னைக்குள் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கினால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகிவிடும் என ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ