உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்

திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க.,வைப் போல கட்சி நடத்தவும், வெற்றி பெறவும் அறிவு வேண்டும்; தி.மு.க.,வைப் போல உழைக்க வேண்டும். சில அறிவிலிகள், தி.மு.க.,வைப் போல வெற்றி பெற்று, முதல்வர் பதவியில் அமரலாம் என பகல் கனவு காண்கின்றனர்,'' என, சென்னையில் நடந்த அறிவுத் திருவிழாவில், த.வெ.க., தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., இளைஞரணி சார்பில், 'தி.மு.க., 75 - அறிவுத் திருவிழா' என்ற தலைப்பில் முற்போக்கு புத்தகக் கண்காட்சி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது. இதில், 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க., 75' என்ற நுாலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின், அவர் பேசியதாவது: ஏதோ ஒரு கட்சியை துவக்கினோம்; அடுத்த முதல்வர் நான் தான் என அறிவித்து, நாம் ஆட்சிக்கு வரவில்லை. எத்தனை போராட்டங்கள், எத்தனை சிறைவாசங்கள், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்களை நாம் சந்தித்துள்ளோம்.தி.மு.க., உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல. தி.மு.க., வரலாறு பற்றி தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கின்றனர். இன்னும் சில அறிவிலிகள், தி.மு.க.,வைப் போலவே வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கின்றனர். தி.மு.க.,வைப் போல வெற்றி பெற, தி.மு.க.,வைப் போல உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க., தான். இனி இப்படியொரு கட்சி, இந்த மண்ணில் தோன்ற முடியாது. தி.மு.க., வரலாறு முழுதுமே போராட்ட வரலாறு தான். அதை நினைவூட்டவே, இந்த அறிவுத் திருவிழா.கருப்பு, -சிவப்பு, நீலம் சேர்ந்து இருக்கும் போது, எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. ராகுல், தேஜஸ்வி என அகில இந்திய தலைவர்களும், தி.மு.க., வைப் பாராட்டுகின்றனர். கொள்கை ரீதியாக தி.மு.க.,வை வீழ்த்த முடியாததால், தேர்தல் கமிஷன் வாயிலாக குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என முயற்சிக்கின்றனர். அது தான், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம். தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என, அனைத்து கட்சிகளும் சொல்லியும், ஏன் அவசரமாக நடத்த வேண்டும்?எதையும் காது கொடுத்து கேட்காமல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கி விட்டது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் போராடிக் கொண்டுஇருக்கிறோம். தேர்தல் களத்தில் வேலை செய்யும் போது, எந்த ஒரு போலி வாக்காளரும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையான வாக்காளர்கள் விடுபடாமல் பார்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

kjpkh
நவ 09, 2025 14:10

சண்டைக்கு போனும் ஆத்தா திட்டும் காச குடு என்று ஒருவர் திட்டி கொண்டிருக்கிறார்.


Perumal Pillai
நவ 09, 2025 14:02

பாம்பின் கால் பாம்பு அறியும். அறிவை பற்றி அறிவாளிகள் பேசுவார். நமக்கு இங்கு வேலை இல்லை .


V Venkatachalam, Chennai-87
நவ 09, 2025 13:56

தூக்கம் தொலைத்தேன்.. தூக்கம் தொலைத்தேன்.. முன்பு முந்திரி கள் ஒவ்வொருத்தனும் ஓவ்வொண்ணை பேசி என் தூக்கத்தை கெடுத்தானுங்க.‌ இப்போ இந்த கொசு என் தூக்கத்தை தொலைச்சிட்டுது.‌ அதன் கடி தாங்க முடியல.


Anantharaman Srinivasan
நவ 09, 2025 13:50

திமுகக்கு ஜல்ரா அடிக்க தினமும் இவ்வளவு நேரமிருக்கே. வேறு தொழில் கிடையாதா..?


KavikumarRam
நவ 09, 2025 13:42

திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு தேவையில்லை.


Chandru
நவ 09, 2025 13:28

அறிவை பற்றி இவர் பேசுகிறார் .


kjpkh
நவ 09, 2025 13:17

ஆக திகட்டல் என்ன கதறினாலும் புலம்பினாலும் வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனதே அல்ல. இவர் ஒருவர் தான் புலம்பி கொண்டிருக்கிறார் வேறு முட்டு முட்டுக் கொடுக்க ஆட்களே காணோம்.


திகழ்ஓவியன்
நவ 09, 2025 14:03

அன்னே கொஞ்சம் 2024 ரொம்ப நாள் இல்லை போன வருடம் திரும்பி பாரு


திகழ்ஓவியன்
நவ 09, 2025 13:09

மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான அன்புச்சோலை திட்டம் - முதல்வர் திருச்சியில் நாளை தொடங்கிவைக்கிறார்::::அன்புச்சோலை மையம் மூத்த குடிமக்கள் நலன் கருதி பல்வேறு அம்சங்கள் கொண்டு, தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாகச் செயல்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். அன்புச்சோலை மையங்களுக்கு முதியோர்கள் சென்றுவர போக்குவரத்து வசதியுள்ள இடங்களில்தான் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. அன்புச்சோலை மையங்களுக்கு வருகை தரும் முதியவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும். DMK வெற்றி உறுதி


வைகை செல்வன்
நவ 09, 2025 13:21

கூவு கூவு ...


தங்கராஜ்
நவ 09, 2025 13:32

இந்த திட்டத்தில் எவ்வளவு சுருட்டு வாழ்த்துக்கள் என்று சொல்லவில்லையே


திகழ்ஓவியன்
நவ 09, 2025 14:00

பாவம்


திகழ்ஓவியன்
நவ 09, 2025 12:54

ஸ்டாலின் இப்படி சொன்னதும் நிறைய பேர் கருத்து திணிப்புகள். அப்போ அவ்வளவு பயம் இவர்கள் கண்ணில் தெரிகிறது .அந்த பயம் இருக்கனும் இருக்க வைப்போம் .அது தான் திராவிட மாடல் அரசு, காமராஜ் ராஜாஜி MGR ஜெயா ஜானகி OPS எடப்பாடி அண்ணாமலை சீமான் இப்போ விஜய் எதிர்த்தவர்கள் புகை ஆகிவிட்டார்கள் , களத்தில் இன்னமும் DMK ஏன் எனில் அதன் கட்டமைப்பு அப்படி , இன்று இந்தியாவில் மோடி ஷா வுக்கு பெரும் தலைவலி ஸ்டாலின் , மோடி இந்த சைடு வரவேமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் அரசு விழா வருகிறேன் கட்சி விழா என்றால் SORRY என்று பம்முகிறார்


Kumar Kumzi
நவ 09, 2025 12:53

அடேங்கப்பா துண்டுசீட்டு மாமேதை அறிவை பத்தி பேசுது ஹாஹாஹா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை