உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது பாட்டில் வீசும் இடமா கொடைக்கானல் ஏரி: 2 மாதத்தில் 6 டன் பாட்டில்கள் அகற்றம்

மது பாட்டில் வீசும் இடமா கொடைக்கானல் ஏரி: 2 மாதத்தில் 6 டன் பாட்டில்கள் அகற்றம்

திண்டுக்கல்: கொடைக்கானல் நகராட்சி கடந்த இரண்டு மாதங்களில், கொடைக்கானல் ஏரியிலிருந்து 6 டன்களுக்கும் அதிகமான மது பாட்டில்களை அகற்றியுள்ளது. கொடைக்கானல் ஏரி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1863ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றான இந்த ஏரியில், படகு சவாரி செய்ய அனைவரும் விரும்புகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், ஏரியில் கழிவுகள், பாட்டில்களை வீசி செல்கின்றனர். உள்ளூர் மக்கள், வியாபாரிகளும், கழிவுகளை கொட்டுகின்றனர்.76 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சுற்றிலும் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு சாலை அமைந்துள்ளது. கழிவுகளை கொட்டுவோருக்கு இந்த சாலை வசதியாக அமைந்து விட்டதாக பலரும் வேதனைப்படுகின்றனர். இப்படி கொட்டப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆட்களை பயன்படுத்தி ஏரியில் இருக்கும் கழிவுகளை அகற்றும் பணி நகராட்சியால் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் 6 டன்களுக்கும் அதிகமான மது பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன. 50 பேர் கொண்ட குழுவால் பாட்டில்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாதங்களில் அவர்கள் முழுமையாக பாட்டில்களை அகற்றி விடுவார்கள் என நகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர கழிவுகள் ஏரியில் மிதக்கின்றன. நீர்வாழ் தாவரம் படர்ந்துள்ளது. இது, பிற பாரம்பரிய தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆக்சிஜன் அளவு குறைந்து, நீரின் தரத்தை கெடுக்கிறதுபெரும்பாலும் இரவு நேரத்தில் தான் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் ஏரியில் வீசப்படுகிறது. ஏரியை சுத்தம் செய்யவும் கழிவுகளை கொட்டுவார் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கொடைக்கானல் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'இது நகராட்சி எதிர்கொள்ளும் ஒரு கடுமையான பிரச்னை. மது பாட்டில்களை ஏரியில் சுற்றுலா பயணிகள் வீசி செல்கின்றனர். இதுவரை, கடந்த 2 மாதங்களில் 6 டன் மது பாட்டில்கள் ஏரியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. ஏரியில் இன்னும் 5 முதல் 6 டன் பாட்டில்கள் இருக்க வாய்ப்புள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Gopalakrishnan Balasubramanian
ஜன 23, 2025 19:31

நான் செய்தால் தவறில்லை - சும்மா ஒரு பாட்டில் தானே என்ற எண்ணம் இருக்கும் வரை, ரோட்டில் எச்சில் துப்புபவர்கள் இருக்கும் வரை, இந்த நாடு இப்படி தான் இருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க ஏற்பாடு செய்தால் ஒழிய, திருந்த வாய்ப்பில்லை


Kannan Ramachandran
ஜன 23, 2025 16:12

அனைத்து ஏரிகளும் சிறிய குளங்களும் குடிகாரனால் கெட்டுப்போனது. எங்கள் பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் பெருங்குடி மற்றும் பிற ஏரிகளை சுத்தம் செய்து வருகிறோம். தவிர்க்க புதிய திட்டம் தேவைப்படும் எல்லா இடங்களிலும் இதே பிரச்சனை


vkn raja
ஜன 30, 2025 07:21

குடிகாரகளால் அல்ல குடிகெடுத்த ஆட்சியார்களால் கேடுகெட்ட. சாரயம் வித்து பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்கள் சாராயகடையை அடைத்தால் அரசை நடத்த முடியாது என்பதால் அல்ல தங்களுக்கு வருமானம் போய்விடும் என்பதால்தான்


வால்டர்
ஜன 23, 2025 15:57

சென்னையில் இருந்து திருநெல்வேலி காரில் செல்லும் பொது எந்த இடத்தில் நிறுத்தினாலும் இந்த பாட்டில் ஆங்காங்கே காணப்படும். கொடைக்கானல் விட்டு வச்சிருப்பாங்களா


Karthik
ஜன 23, 2025 14:51

ஆம், சரியாக சொன்னீர்..


Ramesh
ஜன 23, 2025 13:51

சிங்கப்பூரில் உள்ளது மாதிரி என்று சட்டங்கள் பாரபட்சமின்றி அனைவரையும் தண்டிக்கிறதோ அன்று தான் நம்மவர்கள் திருந்துவார்கள். இதே ஒழுக்கம் கெட்டவர்கள், சட்டங்களை மதிக்காதவர்கள் சிங்கப்பூர் சென்றால் எப்படி கட்டுப்பாடுடன் இருக்கிறார்கள் காரணம் அங்கெல்லாம் 99 % சட்டத்தை நேர்மையாகவும், பாரபட்சமின்றி செயல் படுத்த கூடிய அதிகாரிகள் உள்ளார்கள். கவுன்சிலர் பெயரையோ, எம்எல்ஏ பெயரையோ, மந்திரி பெயரையோ, அரசு அதிகாரி பெயரையோ சொல்லி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. இது சீனாவிற்கும், ஜப்பானிற்கும், கொரியாவிற்கும் பொருந்தும். இங்கெல்லாம் சட்டத்தை மீறி நடந்தாலோ/ தவறிழைத்து விட்டாலோ அது எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் தண்டனை நிச்சயம்.


Ramesh Sargam
ஜன 23, 2025 13:07

ஏரிக்குள் மக்களை அனுமதிப்பதற்கு முன்பு, விமான நிலையங்களில் சோதனை செய்வதுபோல சோதனை செய்து, அவர்கள் எடுத்து செல்லும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்யவேண்டும்.


கோமாளி
ஜன 23, 2025 12:31

Dravidian model


Mani . V
ஜன 23, 2025 12:30

அப்பு, அம்புட்டும் எங்கள் மாடல் ஆட்சியின் அவலம் ஸாரி சாதனை அப்பு. இப்பத் தெரியுதா ஏன் எங்கள் மாடல் ஆட்சி டெட்ரா பாக்கெட்டில் சோமபானத்தை விற்க விரும்புகிறது என்று? இந்த பாட்டில் பிரச்சினையே வராது. அதுனாலதான்.


Kasimani Baskaran
ஜன 23, 2025 11:36

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாடல்...


Loganathan Kuttuva
ஜன 23, 2025 10:21

கண்காணிப்பு காமெரா மூலம் குப்பை கொட்டுபவர்களை கண்டுபிடித்து செலவு தொகையை வசூல் செய்து கொள்ளலாம் .


சமீபத்திய செய்தி