உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோடநாடு வழக்கில் விசாரணை குழு: வீ தி லீடர்ஸ் கோரிக்கை

 கோடநாடு வழக்கில் விசாரணை குழு: வீ தி லீடர்ஸ் கோரிக்கை

சென்னை: 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பொதுச்செயலர் சுவாமிநாதன் அறிக்கை: வீரமணி வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதே அணுகுமுறை, நீலகிரி மாவட்டம் கோடநாடில் நடந்த கொலை, கொள்ளை வழக்கிலும் ஏன் இருக்கக்கூடாது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து, ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகும் முழு உண்மை வெளிவரவில்லை. இதில், அதிகாரம், பணம், ஆவணங்கள், அரசியல் தொடர்புகள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அனைத்து கோணங்களிலும் விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். திட்டமிட்டவர்கள் யார் என்பதும் வெளிவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vasan
செப் 29, 2026 15:05

அந்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக, தமிழ்நாட்டை சேர்ந்த, உயிரோடு இருக்கும் ஏதாவது ஒரு முன்னாள் முதல்வரை நியமிக்க வேண்டும். முதல்வர் பதவியில் குறைந்தது 4 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும், முதல்வர் பதவியிலிருந்து ஒய்வு பெற்று அல்லது நீக்கப்பட்டு குறைந்தது 5 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். மேலே கூறப்பட்ட தகுதிகளை பொருந்தியவர்கள் அனைவரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: திரு.அண்ணாமலை, தலைவர், நாம் தான் தலைவர்கள் அமைப்பு, கிழக்கு கடற்கரை சாலை, பனையூர்.


GMM
செப் 29, 2026 09:11

கொடநாடு கொலை கொள்ளை விவரம் அறிய போலீஸ், அரசு மீது நம்பிக்கை ஏற்பட விசாரணை குழு அவசியம் தேவை.


Lakshminarasimhan
செப் 29, 2026 07:38

இனி ஆகிலும் திமுகவ எதிர்க்கும் எண்ணத்தோடு அரசியல் செய்யணும் இல்லையேல் நீ பணம் சம்பாதிக்கும் கும்பல் என்பது நிரூபணம் ஆகும்


ராஜன்
செப் 29, 2026 07:05

சபாஷ் சரியான அறிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை