உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொங்கு மண்டலம் கொலைக்களத் தலைநகராகிறது: சீமான் வேதனை

கொங்கு மண்டலம் கொலைக்களத் தலைநகராகிறது: சீமான் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கொடூர தி.மு.க., ஆட்சிக்கு கொலைக்களத் தலைநகராகும் கொங்கு மண்டலமே சாட்சி'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை: நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் தோட்டத்துவீட்டில் வசித்துவந்த மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் கொங்கு மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் முதியவர்களை குறிவைத்து அடுத்தடுத்து நடைபெறும் தொடர்படுகொலைகள் அதிர்ச்சி என்பதை தாண்டி அன்றாட நிகழ்வாகிவிட்டதுதான் கொடுந்துயரத்தின் உச்சம்.ஒரே இடங்களில், ஒரே மாதிரியான படுகொலைகள், ஒரே வகையில் தொடர்ந்து நடைபெறுகின்றபோதும் கூட தடுக்க முடியவில்லை என்பது, தி.மு.க., ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு செயலற்று போயுள்ளது என்பதையே காட்டுகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஈரோடு மாவட்டம் சிவகிரி, தற்போது நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி என்று கொங்கு மண்டலத்தில் தொடரும் இக்கொடூரக் கொலைகள் தி.மு.க., ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக வாழவே முடியாத பேராபத்தான சூழல் நிலவுவதையே உறுதிப்படுத்துகிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத்தரப்பு மக்களும் வெளியில் மட்டுமல்ல வீட்டில்கூட பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவது சட்டம் ஒழுங்கு சீரழிவின் மிக மோசமான நிலையாகும். அரசையோ, போலீசாரையோ நம்பி பயனில்லை, தி.மு.க., ஆட்சியில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை எனும் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தான் நடைமுறை உண்மையாகும்.மீதமிருக்கும் ஓராண்டு ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரக்கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை தமிழக மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தி.மு.க., ஆட்சி என்றாலே ரத்த வெள்ளத்தில் மக்கள் மிதக்கும் காட்சிதான் அனைவரின் நினைவுக்கும் வருமளவுக்கு படுகொலைகள் தங்கு தடையின்றி தொடர்ந்து அரங்கேறுகிறது. கொலைவெறி கொடூரர்களின் கூடாரமாகிப்போன தமிழகத்தை மீட்க மக்களின் குருதியைக் குடிக்கும் தி.மு.க ஆட்சியை அகற்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்லாட்சியை மலரச்செய்வது ஒன்றே ஒற்றை வாய்ப்பும், தீர்வுமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

திருட்டு திராவிடன்
ஜூன் 10, 2025 15:49

நீ தனித்து நின்று களம் காணாமலும் திமுகவின் கொத்தடிமையாக இல்லாமல் ஏதாவது ஒரு நல்ல கூட்டணியில் சேர்ந்து அவர்களை எதிர்க்கவும்.


Velan Iyengaar, Sydney
ஜூன் 10, 2025 14:34

தமிழக மக்கள் இந்தியாவிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 234 க்கும் மேல் வெல்லுஓம் என இறுமாப்புடன் கூறுவேன்


Anbilkathiravan
ஜூன் 10, 2025 13:38

இது ஒன்றும் தி மு க தெரியாது, கேட்ட இது தாண்ட திராவிட மாடல் ஆட்சி என்பர். மானம் கேட்ட பொழப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை