கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் ஜன.14ஆம் தேதி இரவு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதுல் சொர்க்கேஸ்வரன் (20), ஐயன்சரண்குமார் (20), நம்புசரன் (19), அஸ்வின் (22) ஆகிய 4 பேரை குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜூத் சிங் காலோன் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் தற்போது ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.