உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமாவளவன் பேச்சுக்கு குறவன் சமூகம் கண்டனம்

திருமாவளவன் பேச்சுக்கு குறவன் சமூகம் கண்டனம்

மதுரை : ''குறவர் இனமக்கள் குறித்து பார்லிமென்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., தவறான தகவல்களை அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு குறவன் நலச்சங்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன், செயல் தலைவர் சுரேஷ் குமார் தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

பார்லிமென்டில் கடந்த வாரம் திருமாவளவன் பேசும்போது 'தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., பட்டியலில் உள்ள குறவன் சமூகத்தினர் ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளனர் எனவும், அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடையாத நிலையில் 'நொமாடிக் டிரைப்ஸ்' (நாடோடி பழங்குடி) ஆக உள்ளனர்' என்பது உள்ளிட்ட பல தகவல்களை தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது.தமிழகத்தில் குறவன் சமூகத்தில் 40 லட்சம் பேர் உள்ளோம். எஸ்.சி., பட்டியல் வரிசையில் 36வதாக உள்ள எங்களுக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு கேட்டு தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.அரசு கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் உள்ளது. ஆனால் 'கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பாதிக்கும் வகையில் பழங்குடியின பட்டியலில் குறவன் சமூகத்தை சேர்க்க வேண்டும்' என தொடர்ந்து அவர் வலியுறுத்துகிறார்.எங்களுக்கு அரசியலில் எவ்வித பிரதிநிதித்துவம் கிடைத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ளார். குறவன் சமூகத்தை எம்.பி.எஸ்.சி., (மிகவும் பின்தங்கிய பட்டியல்) என தனியாக பிரிக்க கோரிக்கை வைத்துள்ளோம். இந்நிலையில் எங்கள் சமூகத்தை அரசியலில் வளர விடாமல் தடுக்கும் நடவடிக்கையாக இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ponssasi
பிப் 12, 2024 13:48

திருமா சார்ந்த சமுதாய மக்கள் பெரும்பாலும் இவரை ஏற்றுக்கொள்வதில்லை. உணர்ச்சிப்பெருக்காக பேசி சமுதாய மக்களிடையில் வெறுப்பை வளர்த்து அதில் பதவி சுகம் காண்கிறார். அதனால்தான் பெரும்பான்மையான மக்கள் திராவிட கட்சிகளில் அதிகம் இருப்பார்கள். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில்தான் சமூக நல்லிணக்கம், மாநாடுகள், விருதுகள் அம்பேத்கார், பெரியார் எல்லாம் தெரிவார்கள்,


Kalaiselvan Periasamy
பிப் 12, 2024 07:06

இந்த திருமாவே ஒரு அரைவேக்காடு மனிதன். இவனை பின்பற்றும் கூட்டமோ முழுவேக்காடு .


N Annamalai
பிப் 11, 2024 20:55

அரைகுறை


P Karthikeyan
பிப் 11, 2024 10:52

குருமாவை வளர விடாமல் திமுக செய்யும் சதிகளை புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் காலடியில் இரண்டு சீட்டுகளுக்காக தவம் கிடக்கிறார் . குருமாவின் புகழை சவுக்கு சங்கர் மட்டும் தான் துதி பாடி வருகிறார். ஜாதி கட்சி தானே குருமா கட்சி. சமீபத்தில் நடந்த அவர் கட்சியின் மாநாட்டின் போது விசிக கட்சி ரௌடிகள் எப்படி மக்களை வேதனையில் விட்டார்கள் என்று பார்த்தோமே ..என்னமோ இவர் தான் அம்பேத்கர் அவர்களை கண்டுபிடித்தது போல் பேசுகிறார் இவருக்கு மட்டும் தமிழ்நாட்டில் மீசை இருப்பது போல் மீசையை முறுக்கிக்கொண்டு எல்லா இடங்களிலும் போஸ்டர் பேனர் வைத்து தொல்லை கொடுக்கிறார் இந்த தொல்(லை) திருமாவளவன்


M Ramachandran
பிப் 10, 2024 20:03

இந்த ஆள் எதைய்ய தான் முழுதாக தெரிந்து பேசுகிறார் எல்லாம் அறை குறை


Arul Narayanan
பிப் 10, 2024 09:07

குறவரையும் நரிக்குறவரையும் ஒன்றாக நினைக்க வைத்து குழப்புகிறார். பொய்யுரைத்து அவர்களை பழங்குடியில் தள்ளி இட ஒதுக்கீட்டில் அவர்களது பங்கை அபகரிக்க.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ