உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே, ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஜெய்சங்கர், 50, நீரில் மூழ்கி பலியானார். தாமலேரிமுத்துார் பஞ்.,க்கு உட்பட்ட ஊரான் வட்டம் பகுதியை சேர்ந்தவர், கூலி தொழிலாளி ஜெய்சங்கர். இவர், இன்று (நவ.,28) தாமலேரிமுத்துார் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். அப்போது, ஏரியில் தவறி விழுந்து சேற்றில் சிக்கி மூச்சு திணறி பலியானார். தகவலறிந்த ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, ஏரியில் நீண்ட நேரம் தேடுதலுக்கு பின், சடலத்தை மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை