உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாய நிலத்தில் கொத்தடிமையாக இருந்தவர் மீட்பு

விவசாய நிலத்தில் கொத்தடிமையாக இருந்தவர் மீட்பு

செங்கம்: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, எனதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 40. இவர், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, மேல்செங்கம் கிராமத்தில் உள்ள ஒருவரது விவசாய நிலத்தில் கொத்தடிமையாக உள்ளதாக, வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இன்று (அக்.,28), திருவண்ணாமலை ஆர்.டி.ஓ., செல்வம், தாசில்தார் மஞ்சுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர், சங்கர் கொத்தடிமையாக உள்ள விவசாய நிலத்திற்கு சென்று அவரை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேல்செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை