உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை; இபிஎஸ் சந்தேகம்

டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை; இபிஎஸ் சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை. ஏதோ கோளாறு உள்ளது. என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும்,' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். திருவெறும்பூர், தஞ்சை பிரதான சாலை பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது; திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்துவிட்டது. 2021 தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் அறிவித்தனர். 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் திமுகவினர் 98% நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் சொல்லிவருகிறார்கள். இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி, அரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, கடலெண்ணை, நல்லெண்ணை என அனைத்து விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. கட்டுப்படுத்த அரசுக்குத் திறமையில்லை. பயத்தில் தான்...சமீபத்தில் அமைச்சர் நேரு பேசியபோது, எம்ஜிஆருக்குத்தான் பெண்களிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது, இப்போது ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று சொன்னார். எம்ஜிஆருக்கு இணை வைத்து எவரும் பேச முடியாது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் இருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இரண்டே மாதத்தில் நிறைவேற்றினார்கள். தமிழகத்தில் அப்படியல்ல, ஓட்டுகளைப் பெறுவதற்கு அழகாகப் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்தர்பல்டி அடிப்பார்கள். திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. திமுக தோல்வியடைவது உறுதி, அந்த பயத்தில் தான் மகளிர் உரிமைத் தொகைக்கான விதியைத் தளர்த்தி கொடுக்கிறார்.வெளிப்படைத்தன்மையில்லைசட்டம் ஒழுங்கு டிஜிபி 30ம் தேதி ஓய்வுபெறுகிறார். 3 மாதத்துக்கு முன்பாகவே பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் மூவரை பரிந்துரைப்பார்கள். அவர்களில் ஒருவரை தேர்வு செய்வார்கள். இதில் என்ன தாமதம், உள்நோக்கம் என்னவென்று தெரியலை. வெளிப்படைத்தன்மையில்லை. ஏதோ கோளாறு உள்ளது. என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும். இந்த பகுதியைச் சேர்ந்த பள்ளிக் கல்வி அமைச்சர் அண்மையில் சட்டசபையில் பேசுகிறார், எந்த விதிமுறையும் இல்லாமல் மேல்நிலைப்பள்ளி அதிகமாக அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டதாகச் சொல்கிறார், பள்ளி திறப்பது தப்பா? கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்களுக்காக அரசாங்கம்,. திமுக ஆட்சியில் அரசாங்கத்துக்காக மக்கள். இதுதான் திமுக, அதிமுகவுக்கான வேறுபாடு.கடனில் முதலிடம்இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வர் ஸ்டாலின். திமுக ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இப்படி கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு. கடன் அதிகம் வாங்கும்போது வரி அதிகமாகும். வரி போட்டுத்தான் கடனை அடைக்க முடியும். இது, ஜல்லிக்கட்டுக்குப் பேர் பெற்ற பகுதி. இங்கு ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும், வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும். சென்னையில் நேற்று பெய்த மழையால் மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில் கண்ணகி நகரில் வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இந்த அரசில் மின்சார வாரியம் சரியாகச் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ரூ.75,000 மானியம்ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படும் என இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pakalavan
ஆக 24, 2025 05:55

நீங்க எவ்வளவு வெளிப்படையா கூவத்தூரில் இருந்தீங்க நடிகைகளை


pakalavan
ஆக 24, 2025 05:47

கூவத்தூரில் நீங்க எவ்வளவு வெளிப்படையா குடுத்தீங்க....


Kasimani Baskaran
ஆக 24, 2025 05:19

திமுககாரர்களை மட்டுமே டிஜிபியா நியமிப்பது வழக்கம்... கிடைக்கவில்லை என்றால் ஒருவரை அடையாளம் கண்டு உருவாக்குவார்கள்.


Tamilan
ஆக 23, 2025 22:39

இவர்தான் கூட்டணி தலைவர் என்பதில் என்ன வெளிப்படை இருந்தது?.


Raja k
ஆக 23, 2025 21:46

முதலில் இந்த கூட்டதை எப்படி கூட்டுகிறீர்கள், தினமும் ஊர்ஊராக வரும் இவர்களுக்கு தினம் கூலியா, மாத சம்பளமா, வண்டி வாகன முதல் எல்லாத்தையும் வெளிபடையா சொல்லுங்க அப்புறம் பார்கலாம்


mohana sundaram
ஆக 23, 2025 21:20

இவருக்கு இவ்வளவு கூட்டம் கூடுவது அதிசயமாக உள்ளது.


தஞ்சை மன்னர்
ஆக 23, 2025 20:30

முதலில் நீங்க செய்த கொடநாடு கொலை வழக்கே வெளிப்படை தன்மை இல்லை 23 வருடத்திற்கு முன்பு நீங்கள் செய்த கொலை வழக்கும் அப்படியே இருக்கு அது நீங்களே உங்க வாயால் சொன்னது உண்மையா பொய்யா


Jack
ஆக 23, 2025 21:04

200 உபிஸ் ..ஏதாவது எழுதணும்


முக்கிய வீடியோ