மேலும் செய்திகள்
இது சின்னம்மை பரவும் காலம் எச்சரிக்கை தேவை: சுகாதாரத்துறை
25 minutes ago
டில்லியில் அமித்ஷா உடன் இபிஎஸ் சந்திப்பு
1 hour(s) ago
ஆத்தூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ளது சித்தேரி கிராமம். இங்கு 260ஏக்கரில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுமார் 60ஏக்கர் அளவிற்கு அப்பகுதியினர் சிலர் 40ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை கொடுத்தனர். முதல்வரின் உத்தரவின் பேரில் சேலம் கலெக்டர் மகரபூசணம் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோரது உதவியுடன் ஏரியில் இருந்த வீடுகள், தென்னைமரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றும் போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவி வருகிறது. மேலும் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளது.
25 minutes ago
1 hour(s) ago