உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று இடங்களில் நிலச்சரிவு

மூன்று இடங்களில் நிலச்சரிவு

திருவண்ணாமலையில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை, 14 கி.மீ., துார சுற்றளவு கொண்டது. இதை ஆக்கிரமித்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அடுக்குமாடி, குடிசை, ஓட்டு வீடுகள் என, 5,000க்கும் மேற்பட்ட வீடுகளில் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.அதே பகுதியில் மற்றொரு மண் சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அதுபோல, மலையின் மேற்கில் நிருதி லிங்கம் உள்ள பகுதி அருகே, ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதில், அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அங்கு யாருக்கும் பாதிப்பு இல்லை.அமைச்சர் வேலு, நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, இரண்டு நாட்களாக பெய்த கன மழையில், சிறு, சிறு பாறாங்கற்கள் உருண்டு, இரண்டு வீடுகள் மீது விழுந்தன. ஒரு வீட்டில் சிக்கிய, ஏழு பேரை காப்பாற்ற, மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மலையிலுள்ள மிகப்பெரிய ஒரு பாறை உருண்டால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மலைகளை பிளந்து எடுக்கும் வல்லுநர்கள், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஏற்காட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் மோகன் மற்றும் பூமிநாதன் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அவர்கள் வந்த பிறகு தான், கற்களை எல்லாம் அகற்றிய பிறகு தான், உள்ளே இருப்பவர்களின் நிலை தெரியும்.தற்போது, ஒருவர் வெளியே சென்றால் தான் மற்றொருவர் வரும் நிலை உள்ளது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு பணியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழை காலங்களில் பிரச்னைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, எதிர்காலத்தில் இது போன்று நிகழாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை