உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு கடைசி வாய்ப்பு

 கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு கடைசி வாய்ப்பு

மதுரை: அரசின் உரிமம் பெற்ற இடங்களை தவிர, மற்ற இடங்களில் கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல மனு:

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, பசுக்கள், எருமைகள், காளைகள் மற்றும் ஆடுகள் திறந்த வெளியில் சட்ட விரோதமாக ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றன. இதை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதை தடுக்க வேண்டும். தமிழகம் முழுதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களை தவிர, வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்பு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மாவட்ட வாரியாக வதைக்கூட விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள்: அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லையே... இன்னும் எத்தனை நாள் அவகாசம் தேவை? அரசு தரப்பிற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிச., 10க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர்: மதுரை பாண்டிகோவிலில் உள்ள வதைக் கூடங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், தினமும் விலங்குகள் வதைக்கப்படுகின்றன. இதுபோல எத்தனை கோவில்களில் நடக்கின்றன என்று தெரியவில்லை. இவ்வாறு கூறி, போட்டோக்களை தாக்கல் செய்தார். நீதிபதிகள்: பாண்டி கோவிலில் மிருக வதைக்கென தனி இடமில்லையா; இப்படி தான் அங்கு வதைக்கப்படுகின்றனவா... அங்கு கால்நடைகள் வதைக்கப்படுவது தொடர்பாக, வரும் 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ